For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகத்துக்கு உடனே காவிரி நீரை திறந்துவிட முடியாது - சுப்ரீம் கோர்ட்டில் கர்நாடகம் 'அடம்'!

By Mathi
Google Oneindia Tamil News

Supreme court
டெல்லி: தமிழ்நாடு கேட்பதைப் போல் காவிரியிலிருந்து உடனடியாக தண்ணீரை திறந்துவிட முடியாது என்று உச்சநீதிமன்றத்தில் கர்நாடக அரசு பதில் மனுவை தாக்கல் செய்திருக்கிறது.

பிரதமர் தலைமையில் காவிரி நதி நீர் ஆணையத்தைக் கூட்ட வேண்டும்; வறட்சிக் காலத்தில் காவிரியில் இருந்து தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நீரைத் திறந்து விட கர்நாடகத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்திருந்தது. இம் மனுவைக் கடந்த 13-ம் தேதி விசாரித்த நீதிபதிகள் டி.கே. ஜெயின், மதன் பி. லோகுர் அடங்கிய அமர்வு, கர்நாடக அரசு பதிலளிக்க உத்தரவிட்டது. இதையடுத்து, கர்நாடக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதில் கூறப்பட்டுள்ளதாவது:

வறட்சிக் காலத்தில் காவிரி நீரைப் பகிர்ந்து கொள்ள 2001-ம் ஆண்டு அக்டோபர் 10-ம் தேதி மத்திய நீர் வள ஆணையம் திட்டம் வகுத்தது. ஆனால், அந்தத் திட்டத்தை அப்போதே கர்நாடகம் ஏற்கவில்லை. அப்படியிருக்கும்போது தமிழ்நாட்டுக்குக் கர்நாடகத்தால் எவ்வாறு நீரை வழங்க முடியும்? கபினி, ஹாரங்கி, ஹேமாவதி, கிருஷ்ணராஜசாகர் ஆகிய 4 அணைகளில் தேவைக்கு அதிகமான நீரைத் தேக்கி வைத்துள்ளதாக தமிழக அரசு சுமத்தும் குற்றச்சாட்டைக் கர்நாடகம் மறுக்கிறது.

கடந்த ஜூலை மாதம் 20-ம் தேதிவரை இந்த நான்கு அணைகளில் 22 டிஎம்சி தண்ணீர்தான் இருந்தது. அதில் குடிநீர், விவசாய தேவைக்காக 17.7 டிஎம்சி நீர் மட்டுமே தேக்கி வைக்கப்பட்டுள்ளது. மேலும், பிலிகுண்டுலு நீர்த்தேக்கத்தில் இருந்து தமிழகத்துக்கு 7.16 டிஎம்சி தண்ணீர் அளிக்கப்பட்டுள்ளது. எனவே, அனைத்து நீரையும் கர்நாடகமே வைத்துக் கொள்வதாகக் கூறுவதை ஏற்றுக் கொள்ளக் கூடாது. அதே போல், கர்நாடக அணைகளில் அளவுக்கு அதிகமான நீர் இருப்பதாகவும் அதை வைத்து விவசாய சாகுபடி பெருமளவில் செய்யப்பட்டுள்ளதாகவும் தமிழகம் கூறுவதையும் கர்நாடக அரசு ஆட்சேபிக்கிறது. எங்கள் மாநிலத்தில் ஓடும் தண்ணீரைக் கொண்டு விவசாயம் செய்ய யாரைக் கேட்க வேண்டும்?

காவிரி நடுவர்மன்ற உத்தரவின்படி கர்நாடகத்தில் இருந்து தண்ணீர் திறந்து விட கால அவகாசம் உள்ளது. இந்த நிலையில், கர்நாடகத்தில் இருந்து "உடனடியாகத் தண்ணீரைத் திறந்து விடுங்கள்', என்று தமிழக அரசு நெருக்கடி கொடுப்பதை ஏற்க முடியாது.

காவிரி நதி நீர் ஆணையத்தைக் கூட்ட கர்நாடகத்துக்கு ஆட்சேபம் இல்லை. அதே வேளையில், அந்தக் கூட்டத்தில் கர்நாடகத்தில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீரைத் தற்போதைய நிலையில் திறந்து விட முடியாது என்ற எங்களின் நிலையைத் தெரிவிப்போம். எனவே, தமிழக அரசு தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கர்நாடக அரசு கூறியுள்ளது.

இந்த மனு மீதும் தமிழக அரசு ஏற்கெனவே தாக்கல் செய்த மனு மீதும் செப்டம்பர் 3-ந் தேதி உச்ச நீதிமன்றம் விசாரணை நடத்தக் கூடும்.

English summary
Taking a defiant stand, the Karnataka Government on Friday told the Supreme Court that Tamil Nadu was not entitled to seek the release of Cauvery water every week or month as Karnataka had time till December to ensure adequate release of water at Biligundlu, the inter-State border Biligundlu.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X