தங்கம் விலையில் மூன்றாவது நாளாக ஆச்சரியம்.. நகைப்பிரியர்கள் திகைப்பு
சென்னை: தங்கம் விலை கடந்த மே 12ம் தேதி 1 லடசத்து 14 ஆயிரத்து 640 ஆக இருந்தது. ஆனால் தங்கத்தின் மீதான இறக்குமதி வரி உயர்த்தப்பட்டதால் கடந்த மே 13 தங்கம் விலை அண்மையில் கடுமையாக உயர்ந்தது. அன்றைய நாளில் கிராமுக்கு ரூ.670-ம் சவரனுக்கு ரூ.5,360-ம் உயர்ந்து ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 20 ஆயிரத்தை தொட்டது. ஆனால் தங்கம் விலை ஒரே நாளில் 2 ஆயிரத்திற்கு மேல் குறைந்துள்ளது. மே 17ம் தேதி நிலவரப்படி தங்கம் விலை ஒரு லட்சத்து 18 ஆயிரம் ஆக உள்ளது. மே 18ம் தேதியான இன்று தங்கம் விலை மாறும் என்பதால் எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. ஆனால் தங்கம் விலையில் எந்த மாற்றமும் இல்லை
சர்வதேச சந்தையில் தங்கம் விலையில் ஏற்ற-இறக்கம் தொடர்ந்து நீடிக்கிறது. இந்தியாவை பொறுத்தவரை சர்வதேச நிலவரம் ஒரு காரணம் எனறால், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடுமையாக சரிந்து வருவதும் தங்கம் விலை உயர காரணமாக இருந்து வந்தது.

அதேபோல் கடந்த 12-ந்தேதி சவரனுக்கும், ரூ.1,840 உயர்ந்திருந்த நிலையில், அதற்கு மறுநாள் தங்கத்தின் மீதான இறக்குமதி வரி உயர்த்தப்பட்டதால் மீண்டும் விலை அதிகரித்தது. மே 13ம் தேதி ஒரே நாளில் கிராமுக்கு ரூ.670-ம், சவரனுக்கு ரூ.5,360-ம் உயர்ந்து ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 20 ஆயிரத்தை தொட்டது. இதன் தொடர்ச்சியாக மே 14ம் தேதி சவரனுக்கு ரூ.400 அதிகரித்தது. இதனால் மே 14ம் தேதி ஒரு கிராம் தங்கம் 15,050 ரூபாயும், ஒரு சவரன் 120,400க்கும் விற்பனையானது.
ஆனால் மே 16ம் தேதியான சனிக்கிழமை அன்று தங்கம் விலை அதிரடியாக குறைந்தது. ஒரு கிராம் தங்கம் 14765 ரூபாய்க்கு சென்னையில் விற்பனையானது. ஒரு சவரன் தங்கம் மே 16ம் தேதி அன்று 11820 ரூபாய்க்கு விற்பனையானது. மே 17ம் தேதியான நேற்று ஞாயிறு என்பதால் தங்கம் விலை எந்த மாற்றமும் இல்லாமல் விற்பனையானது. இதன்படி 11820க்கு விற்பனையானது.இன்று திங்கள்கிழமை என்பதால் தங்கம் விலையில் நிச்சயம் மாற்றம் இருக்கும், சர்வதேச நிலவரத்திற்கு ஏற்ப தங்கம் விலையில் இன்று ஏற்ற இறக்கம் இருக்க அதிக வாய்ப்பு உள்ளது என்றும் நம்பப்பட்டது. ஆனால் தங்கம் விலையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை.
பிரதமர் நரேந்திர மோடி , அண்மையில் தங்கம் வாங்குவதை மக்கள் ஓராண்டிற்கு தள்ளிப்போட வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.அண்ணிய செலவாணி அதிக அளவில் வெளியேறியதால், நாட்டு நலன் கருதி இதனை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தார். ஏனெனில் இந்தியர்கள் ஒரு வருடத்திற்குத் தங்கம் வாங்குவதைக் கடுமையாகக் குறைத்தால், இறக்குமதியில் 30-40% குறைந்தால், 20-25 பில்லியன் டாலர் மிச்சமாகும் வாய்ப்பு உள்ளது. 50% குறைந்தால், 36 பில்லியன் டாலர் மிச்சமாகும். இது கணிக்கப்பட்டுள்ள நாட்டின் மொத்தப் பற்றாக்குறையில் பாதியாகும்..
2026-ல் இந்தியாவின் நடப்புக் கணக்கு பற்றாக்குறை (CAD) 84.5 பில்லியன் டாலராக (GDP-யில் 2%) அதிகரிக்கும் என ஐஎம்எப் கணித்துள்ளது. இந்திய மதிப்பில் 8 லட்சத்து 4ஆயிரத்து 77கோடி நடப்பு கணக்கு பற்றாக்குறை உள்ளது. அதாவது , இந்தியாவுக்கு உள்ளே வரும் டாலரை விட வெளியே செல்லும் டாலர் அதிகமாக இருக்கும். இதற்குத் தங்கம் ஒரு முக்கியக் காரணமாக இருப்பதாக மத்திய அரசு நினைக்கிறது.
-
படக்குனு 10 கிராம் வாங்கி போடுங்க.. சட்டென மாறிய தங்க சந்தை! 6 மாதத்தில் இல்லாத சரிவு! சரியான நேரமா? -
கோல்டு ETF, வெள்ளி ETF-களில் முதலீடு செய்தவர்கள் கண்ணீர்.. திடீரென சரிவது ஏன்? அடுத்து என்ன செய்ய வேண்டும்? -
ஆடிய ஆட்டமென்ன? தலைகீழான தங்கத்தின் தலையெழுத்து! கன் மாதிரி நிற்கும் டாலர்! தள்ளாடும் மார்க்கெட்! -
Gold Price Today: தடாலடியாக சரிந்த தங்கம் விலை.. 8 நாளில் 8,000 சரிவு.. குஷியில் நகை பிரியர்கள்! இன்றைய ரேட் என்ன? -
தாறுமாறாக சரிந்த தங்கம்.. தொடர்ந்து இன்னும் சரியுமா? விலை வீழ்ச்சிக்கு காரணம் என்ன? -
Gold Price: தாறுமாறாக சரிந்த தங்கம் விலை.. ஒரே நாளில் ரூ.3,200 குறைந்தது.. நகை பிரியர்களுக்கு இன்ப அதிர்ச்சி! -
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி












Click it and Unblock the Notifications