சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ரயில்- இலங்கையில் வெற்றிகரமாக வெள்ளோட்டம்!

Subscribe to Oneindia Tamil

ஹட்டன்: சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட புதிய ரயில் வண்டி, இலங்கையில் உள்ள ஹட்டன் ரயில் நிலையத்தில் வெள்ளோட்டம் பார்க்கப்பட்டது.

இலங்கை அரசு ரயில் போக்குவரத்துக்கு தற்போது மிகவும் முக்கியத்துவம் அளித்து வருகிறது. இதனால் இலங்கை பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு இந்தியா சீனா நாடுகளிடம் இருந்து ரயில்களை அதிக அளவில் இறக்குமதி செய்து வருகிறது.

இந்தியாவில் இருந்து ரயில்கள் சிலவற்றை இலங்கை அரசு கடந்த சில நாட்களுக்கு முன்பு இறக்குமதி செய்தது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு சீனாவில் இருந்து 13 புதிய இரயில் வண்டிகளை இலங்கை அரசு இறக்குமதி செய்தது. இதில் 5 வண்டிகள் ஏற்கனவே இலங்கையை வந்தடைந்துவிட்டன.

இந்த நிலையில் இறக்குமதி செய்யப்பட்ட புதிய ரயில்களின் வெள்ளோட்ட நிகழ்ச்சிக்காக புதிய ரயில் வண்டி ஒன்று ஹட்டன் ரயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது. இதில் ஒரு ரயில் மூலம் மலையக மார்க்கத்தில் வெள்ளோட்டம் நடைபெற்றதாக இலங்கை ரயில்வே அமைச்சகத்தின் திட்டமிடல் அதிகாரி விஜய சமரசிங்க தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்ட ரயில்களை அடுத்த 2 வாரங்களில் வெள்ளோட்டம் நடத்தி பரிசோதிக்கப்படும் என்று இலங்கை ரயில்வே துறை அறிவித்துள்ளது.

இந்தியாவுக்கு பெரும் அச்சுறுத்தலாகத் திகழும் சீனாவிடம் கடந்த பல ஆண்டுகளாக இலங்கை அரசு நெருங்கிய நட்பு பாராட்டுவது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+