மாணவிகள், ஆசிரியைகளுக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்த ஆசிரியர் டிஸ்மிஸ்: கல்வித்தகுதியும் பறிபோகிறது

Subscribe to Oneindia Tamil

நாமக்கல்: நாமக்கல் அருகே உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மாணவிகள் மற்றும் ஆசிரியைகளுக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்து வந்த ஆசிரியர் சத்தியபிரபு டிஸ்மிஸ் செய்யப்பட்டதுடன் அவரது கல்வித் தகுதியும் ரத்து செய்யப்படுகிறது.

நாமக்கல்லை அடுத்த புதன்சந்தை சிவன் மலைகரடு பகுதியைச் சேர்ந்தவர் சத்தியபிரபு(32). எம்.ஏ., எம்.பில். ஆங்கில இலக்கியம் படித்த அவர் கடந்த 2007ம் ஆண்டு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்பட்டு தர்மபுரி மாவட்டம் அரூர் யூனியன் கொலாப்பாறை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சேர்ந்தார். அங்கு அவர் 2 ஆண்டுகள் பணியாற்றிய பிறகு நாமக்கல் அருகே உள்ள வடுகப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு இடமாறுதல் பெற்று வந்துள்ளார்.

அங்கு அவர் மாணவிகள் மற்றும் ஆசிரியைகளுக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்து வந்ததாக புகார் எழுந்தது. அவரது செயல்பாட்டைக் கண்டித்து பெற்றோர்கள் கடந்த ஜூன் மாதம் 25ம் தேதி பள்ளி முன்பு போராட்டம் நடத்தினர். இதையடுத்து சத்தியபிரபு மீதான குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்தப்பட்டதில் அவர் மாணவிகள் மற்றும் ஆசிரியைகளிடம் தகாத முறையில் நடந்தது உறுதியானது. தொடர்ந்து அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

சஸ்பெண்ட் செய்யப்பட்ட அவரை டிஸ்மிஸ் செய்து மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் அருள்மொழி தேவி உத்தரவிட்டுள்ளார். பள்ளி மாணவிகளிடம் தவறான முறையில் நடந்து கொள்ளும் ஆசிரியர்களை டிஸ்மிஸ் செய்வதுடன் அவர்களின் கல்வித் தகுதியையும் ரத்து செய்ய தமிழக அரசு கடந்த ஜூன் மாத இறுதியில் உத்தரவிட்டிருந்தது.

அந்த உத்தரவின்படி சத்தியபிரபுவின் கல்வித் தகுதி ரத்து செய்யப்படவிருக்கிறது. கல்வித் தகுதி ரத்து செய்யப்படும் முதல் ஆசிரியர் அவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இது குறித்து அருள்மொழி தேவி கூறுகையில்,

தற்போது சத்தியபிரபு டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளார். தொடக்கக் கல்வித் துறை இயக்குனர் அலுவலகத்தில் இருந்து உத்தரவு வந்தவுடன் அவரது கல்வித் தகுதி ரத்து செய்யப்படும் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+