50 இளைஞர்களை மயக்கி மணந்து ஏமாற்றிய கேரள அழகி சகானாவுக்கு போலீஸ் புது வலை

Subscribe to Oneindia Tamil

Sagana
சென்னை: தமிழகம் மற்றும் கேரளாவில் பல்வேறு இளைஞர்களை திருமணம் செய்து அவர்களிடம் இருந்து பல லட்சம் மோசடி செய்த கேரள அழகி சகானாவை போலீசார் வலைவீசித் தேடி வருகின்றனர்.

கேரளாவைச் சேர்ந்தவர் சகானா. அவர் தமிழகம் மற்றும் கேரளாவில் பல இளைஞர்களை மயக்கி அவர்களை திருமணம் செய்து அவர்களிடம் இருந்து நகை, பண்ம் ஆகிவயற்றை பறித்து மோசடி செய்துள்ளார். இந்த விஷயம் கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் வெளிச்சத்திற்கு வந்தது.

முகலிவாக்கத்தைச் சேர்ந்த மணிகண்டன், புளியந்தோப்பைச் சேர்ந்த பிரசன்னா ஆகியோர் சகானா தங்களை திருமணம் செய்து ஏமாற்றியது குறித்து சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்தனர். அப்போது அவர்கள் தங்கள் திருமணத்தின்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை ஆதாராமாகக் காட்டினர்.

அவர்கள் தவிர திருவொற்றியூரைச் சேர்ந்த சரவணன், அடையாறைச் சேர்ந்த மற்றும் ஒரு சரவணன் ஆகியோரும் சகானாவிடம் ஏமாந்தவர்களில் அடக்கம். சகானா இதுவரை 50 இளைஞர்களை மணந்து ஏமாற்றியுள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால் இதுவரை 5 பேர் மட்டுமே சகானா தங்களை ஏமாற்றியதாக புகார் கொடுத்துள்ளனர்.

அவர்களின் புகார்கள் அடையாறு உதவி கமிஷனர் மோகன்ராஜுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அந்த புகார்களில் குறிப்பிடப்பட்டுள்ள சகானாவின் செல்போன் எண்களை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சகானா கடைசியாகப் பயன்படுத்திய 2 எண்களை போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். நேற்று முன்தினம் சகானாவின் எண்ணைத் தொடர்பு கொண்டபோது அவர் வெளிமாநிலத்தில் இருந்தது தெரிய வந்தது. அதன் பிறகு அவரின் செல்போன் தொடர்ந்து சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளதால் அவர் எங்கு இருக்கிறார் என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை.

சகானாவின் கணவன்மார்களை விட்டு அவரைத் தொடர்பு கொண்டு அவரை கைது செய்ய போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+