வெனிசுலாவின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் பயங்கர தீ விபத்து: 39 பேர் பலி
காரகாஸ்: வெனிசுலாவின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 39க உயர்ந்துள்ளது.
வட அமெரிக்க நாடான வெனிசுலாவின் வட பகுதியான பாராகுவானாவில் உள்ளது அமுவே எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம். உலகின் மகிப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களில் ஒன்றான அமுவேயில் நேற்று தீ விபத்து ஏற்பட்டு வெடிப்பு சம்பவம் நடந்தது. இதில் 26 பேர் பலியாகினர், மேலும் 80க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இந்நிலையில் பலியானோர் எண்ணிக்கை 26ல் இருந்து 39க உயர்ந்துள்ளது.
அங்கு விபத்து ஏற்பட்டதும் அதன் அருகில் இருந்த கடைகள், வீடுகள் குலுங்கின. சுத்திகரிப்பு நிலையத்தில் தீ கொளுந்துவிட்டு எரிந்தது என்று அதன் அருகில் வசித்தவர்கள் தெரிவித்தனர். இந்நிலையில் தீ முற்றிலும் அணைக்கப்பட்டுவிட்டதாகவும், நாளை முதல் பணிகள் மீண்டும் துவங்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து வெனிசுலா துணை அதிபர் எலியாஸ் கூறுகையில்,
அமுவே எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் ஏற்பட்ட விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 39க உயர்ந்துள்ளது. பலியானோர்களில் தேசிய பாதுகாப்பு படையைச் சேர்ந்த 18 பேர் அடக்கம். இறந்தவர்களில் 6 பேரின் உடல்கள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை என்றார்.
இந்த விபத்து மிகவும் கவலை அளிப்பதாகவும், வேதனை அளிப்பதாகவும் உள்ளது என்று வெனிசுலா அதிபர் ஹுகோ சவேஸ் தெரிவித்துள்ளார். மேலும் 3 நாள் துக்கம் அனுஷ்டிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications