ஓணம் பண்டிகை : சபரிமலை ஐயப்பன் கோயில் நடைதிறப்பு
Subscribe to Oneindia Tamil

கேரள மக்கள் வெகு விமரிசையாகக் கொண்டாடும் ஓணம் பண்டிகை வரும் புதன்கிழமை கொண்டாடப்பட உள்ள நிலையில், ஐயப்பனுக்கு
செவ்வாய்கிழமை முதல் சிறப்பு பூஜைகளும், அபிஷேகங்களும் செய்யப்பட உள்ளன. செவ்வாய்கிழமை காலையில் தந்த்ரி கண்டரேரு ராஜீவரரூ மகா கணபதி பூஜையை தொடங்கிவைக்கிறார். அன்றைய தினம் கோவிலின் மேல்சாந்தி உத்ராட சதயம் அளிக்கிறார். உச்சிகால பூஜைக்குப் பின்னர் இது தேவசம்போர்டு உறுப்பினர்களும், பக்தர்களுக்கும் அளிக்கப்படுகிறது. இதனையடுத்து புதன்கிழமையன்று கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு ஓணம் விருந்து அளிக்கப்படுகிறது.
ஐயப்பன் கோவில் நடை தொடர்ந்து 31ம் தேதி இரவு வரை பக்தர்களின் வழிபாட்டுக்காக நடை திறந்திருக்கும். அன்றிரவு 10 மணிக்கு அரிவராசனம் பாடல் பாடி கோவில் அடைக்கப்படும்.












Click it and Unblock the Notifications