கூவத்தின் வரலாறு கூட தெரியாத குஷ்புவெல்லாம்.... ராதாரவி நக்கல்!

நாகர்கோவிலில் நடந்த அதிமுக பொதுக் கூட்டத்தில் நடிகர் ராதாரவி கலந்து கொண்டு பேசினார். அவரது பேச்சிலிருந்து சில பகுதிகள்:
தேர்தல் சமயத்தில் அதிமுகவை அழித்து விடுவோம் என கூறிய பலர் இன்று காணாமல் போய் விட்டனர். அதிமுகவை யாராலும் அழிக்க முடியாது. ஏனென்றால் இது புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். உருவாக்கிய கட்சி.
முதல்வர் ஜெயலலிதா தமிழகத்தில் பல்வேறு மக்கள் நல திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். வசதி படைத்தவர்களே வாங்க யோசிக்க கூடிய லேப்-டாப் கம்ப்யூட்டரை பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் அனைத்து ஏழை மாணவர்களுக்கும் வழங்கி அவர்களையும் சமநிலைக்கு உயர்த்தி உள்ளார். இது தான் நாட்டிற்கு தேவையான வளர்ச்சி.
இலங்கையில் 3 லட்சம் தமிழ் பெண்கள் விதவையாக காரணம் திமுக தலைவர் கருணாநிதி. அவர் டெசோ மாநாடு நடத்தி மக்களை குழப்புகிறார்.
விஜயகாந்துக்கு 41 சீட் கொடுத்து அவரை எதிர்கட்சி தலைவர் ஆக்கியவர் ஜெயலலிதா. ஆனால் அவருக்கு அதை காப்பாற்றிக் கொள்ள தெரியவில்லை. அவரெல்லாம் புரட்சிதலைவியைப் பற்றி பேசக் கூடாது.
கூவம் ஆற்றின் வரலாறு கூட தெரியாத குஷ்பு இன்று முல்லை பெரியாறு பற்றியெல்லாம் பேசுகிறார்.
நான் இப்போது கூட வருடத்திற்கு 5 படங்களிலாவது நடிக்கிறேன். ஆனால் ஒரு நல்ல நடிகர் வடிவேலு. அவரிடம் எவ்வளவோ எடுத்துக் கூறினேன். ஆனால் அவர் கேட்க வில்லை. மாறாக விஜயகாந்தை பழி வாங்குவதாக நினைத்து பேசினார். ஒரே நாள் ராத்திரியில் இருந்து அவருக்கு சினிமா வாய்ப்பு இல்லாமல் போய் விட்டது.
சிலர் புரட்சித்தலைவிக்கு இந்தியாவின் பிரதமராக ஆசை இருப்பதாக கூறுகிறார்கள். ஆனால் அப்படியல்ல, இந்தியா தான் ஜெயலலிதா பிரதமராக வேண்டும் என ஆசைப்படுகிறது. இந்தியாவில் இருக்கும் அனைத்து மொழிகளையும் இலக்கணத்தோடு பேசும் திறன் படைத்தவர் புரட்சித் தலைவி. அடுத்த தேர்தலிலும் அதிமுகதான் அமோக வெற்றி பெறும் என்றார் ராதாரவி.
-
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன்












Click it and Unblock the Notifications