முல்லா ஒமர் பாகிஸ்தானில் தான் உள்ளார்: அமெரிக்கா

அல் கொய்தா தலைவர் பின்லேடன் பாகிஸ்தானில் தான் உள்ளதாக அமெரிக்கா கூறி வந்ததை பாகிஸ்தான் மறுத்து வந்த நிலையில், அந்த நாட்டின் அபோடாபாத் நகரில் வைத்து பின்லேடனைக் கொன்றது அமெரிக்கா.
இந் நிலையில் முல்லா ஒமரும் அங்கு தான் இருப்பதாக அமெரிக்கா திட்டவட்டமாகக் கூறியுள்ளது. ஆனால், அவர் ஆப்கானிஸ்தானுக்குள் தான் இருப்பதாக பாகிஸ்தான் கூறி வருகிறது.
இது குறித்து ஆப்கானிஸ்தானில் உள்ள நேடோ படையின் தலைவரும் அமெரிக்க ராணுவ மூத்த அதிகாரியுமான ஜெனரல் ஜான் அலென் வாஷிங்டன் போஸ்ட் பத்திரிக்கையில் எழுதியுள்ள கட்டுரையில்,
முல்லா ஒமரும் அவரது முக்கிய குழுவினரும் எல்லை தாண்டி பாகிஸ்தானுக்குள் தான் உள்ளனர்.
பாகிஸ்தானில் இருந்தபடி இன்னும் ஆப்கானிஸ்தானுக்குள் அப்பாவி இளைஞர்களை, மதரீதியில் மூளைச்சலவை செய்து ஆயுதம் ஏந்தி போராட அனுப்பி வருகின்றனர். அவர்கள் நேடோ படையினரைத் தாக்கி வருகின்றனர். பதில் தாக்குதலில் அவர்கள் கூட்டம் கூட்டமாக பலியாகி வருகின்றனர்.
முல்லா ஒமர் அனுப்பும் தலிபான்கள் எங்களை மட்டுமல்ல, அப்பாவி மக்களையும் கொன்று குவித்து வருகின்றனர். ஆனால், பொது மக்களைத் தாக்கக் கூடாது என்று பெயரளவுக்கு முல்லா ஒமரிடமிருந்து அறிக்கைகள் வருகின்றன.
ஆனால், தலிபான்கள் அப்பாவி மக்களைக் கொன்று குவிப்பதை நிறுத்தவில்லை. இதைப் பார்க்கும்போது தலிபான்கள் ஒமரின் கட்டுப்பாட்டில் இல்லை என்று கூட நினைக்கத் தோன்றுகிறது.
ஆப்கானிஸ்தானின் போதை மருந்து உற்பத்தி மூலம் தான் ஒமருக்கு பணம் கிடைத்து வந்தது. ஆனால், போதை மருந்து செடிகள் வளர்ப்பு, போதை மருந்து உற்பத்தியை கிட்டத்தட்ட கட்டுப்படுத்திவிட்டோம். இதனால் ஒமர் கடும் பணப் பற்றாக்குறையால் தவித்து வருகிறார் என்று எழுதியுள்ளார் அலென்.
பாகிஸ்தான் செல்ல வேண்டாம்:
இந் நிலையில் பாகிஸ்தானில் அமெரிக்கர்களைக் குறி வைத்து தாக்குதல் நடக்கலாம் என்பதால் பாகிஸ்தான் செல்ல வேண்டும் என அமெரிக்கா அறிவுறுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications