குன்னூரில் இருந்து இலங்கை இராணுவ அதிகாரிகள் திருப்பி அனுப்பப்படுவார்களா? 2 நாட்களில் தெரியும்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: வெலிங்டனில் பயிற்சி பெறும் இலங்கை ராணுவ அதிகாரிகளை திருப்பி அனுப்புவது குறித்து இன்னும் 2 நாட்களில் முடிவு தெரியும் என்று மத்திய இணையமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கிளம்பிய எதிர்ப்பையும் மீறி இலங்கை ராணுவ வீரர்கள் இருவர் வெலிங்டனில் பயிற்சி பெற்று வருகின்றனர். அவர்களுக்கு பயிற்சி அளிக்கக் கூடாது என்று முதல்வர் ஜெயலலிதா பிரதமருக்கு கடிதம் எழுதினார். ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருக்கும் திமுகவும் வலியுறுத்தியது. ஆனால் இலங்கை ராணுவ வீரர்களுக்கு இந்தியாவில் பயிற்சி அளிப்போம் என்று மத்திய அமைச்சர் பல்லம் ராஜு தெரிவித்தார். இதற்கு முதல்வர் உள்பட பல்வேறு அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

இந்நிலையில் இது குறித்து மத்திய இணையமைச்சர் நாராயணசாமி கூறுகையில்,

வெலிங்டனில் இலங்கை ராணுவ அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்க தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது பற்றி மத்திய ராணுவ அமைச்சர் ஏ.கே. அந்தோணியிடம் தெரிவித்தோம். இந்த விவகாரம் குறித்து இன்னும் 2 நாட்களில் நல்ல முடிவு எடுப்பதாக அவர் உறுதியளித்தார். ஈரானுக்கு சென்றுள்ள பிரதமர் நாடு திரும்பியதும் இலங்கை ராணுவ அதிகாரிகளை திருப்பி அனுப்புவது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+