இலங்கையில் சீன பாதுகாப்பு அமைச்சர்: ராணுவ முகாம்களில் ஆய்வு
கொழும்பு: வெளிநாடுகளுக்கு அதிக பயணம் மேற்கொள்ளாத சீனாவின் பாதுகாப்புத் துறை அமைச்சர் இலங்கையின் ராணுவ முகாம்களில் ஆய்வு மேற்கொண்டு ஆலோசனைகளை வழங்கி வருகிறார்.
சீன பாதுகாப்பு அமைச்சர் லியாங் குவாங்லி 5 நாள் பயணமாக நேற்று இலங்கைக்கு வருகை தந்தார். அவருடன் 25 பேர் கொண்ட குழுவும் வருகை தந்திருக்கிறது.
அவர் இலங்கையின் ராணுவ தளங்கள், பாதுகா அம்சங்கள் பற்றி அந்நாட்டு தலைவர்கள், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். மேலும் ராணுவத்தை மேம்படுத்துவதற்காக வழங்கப்பட்ட 100 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான திட்டப் பணிகளையும் அவர் ஆய்வு செய்கிறார். குறிப்பாக இந்தியா கவனம் செலுத்தி வரும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் சீனா உதவியுடனான ராணுவ மேம்பாட்டுப் பணிகளை அவர் பார்வையிடுகிறார்.
இலங்கையை கிட்டத்தட்ட சீனாவின் திபெத் போன்ற காலணி நாடக மகிந்த ராஜபக்ச அரசாங்கம் ஒப்படைத்துவிட்டது என்பதுதான் அந்நாட்டு தமிழர் கட்சிகளின் குற்றச்சாட்டாக இருக்கிறது.












Click it and Unblock the Notifications