ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜக தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கைது: இல.கணேசன் கண்டனம்
சென்னை: பாஜக மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் கட்சி தொண்டர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் கண்டிக்கத்தக்கது என்று அக்கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
குமரி மாவட்டத்தில் சமீபகாலமாக அமைதியான சூழ்நிலை இருப்பது போன்று தோற்றம் அளித்தாலும், ஆங்காங்கு மதமாற்ற நடவடிக்கைகளும், இந்து மதத்திற்கு எதிரான நடவடிக்கைகளும் நடைபெற்று வருகின்றன. சமீபத்தில் நடைபெற்ற ஒரு கொலை சம்பவத்தில் சம்பந்தமே இல்லாமல் மாவட்ட பாஜக தலைவர் தர்மராஜ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
அதை கண்டித்து நாகர்கோவிலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாநில பாஜக தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் கைது செய்து அடைக்கப்பட்டுள்ள மண்டபத்திற்குள், காவல் துறையினர் தடியடி நடத்தியது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
கைது செய்யப்பட்டுள்ள மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் அனைத்து பாஜக தொண்டர்களும் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
"கரப்பான் பூச்சி கட்சியை நோக்கி இளைஞர்கள்".. வார்னிங் கொடுத்த துணை ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம்












Click it and Unblock the Notifications