2 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மாற்றம்: தமிழக அரசு அறிவிப்பு
சென்னை: 2 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
இது குறித்து தமிழக அரசின் தலைமை செயலாளர் தேபேந்திரநாத் சாரங்கி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
தமிழக அரசின் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை முதன்மை செயலாளராக இருந்த நிரஞ்சன் மார்டி அங்கிருந்து மாற்றப்பட்டு, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை முதன்மை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அதே போல, நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை முதன்மை செயலாளராக இருந்த ராமச்சந்திரன், தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் அமைப்பு மற்றும் பால் உற்பத்தி துறை மேலாண் இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும், தொழில் துறை கூடுதல் தலைமை செயலாளராக பணியாற்றி வரும் சுந்தரதேவன், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை பொறுப்பை கூடுதல் பொறுப்பாக கவனிப்பார் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications