முல்லைப் பெரியாறு: நிபுணர் குழு அறிக்கையை டிஜிட்டல்மயமாக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு
Subscribe to Oneindia Tamil

முல்லைப் பெரியாறு அணை குறித்து ஆய்வு செய்த நீதிபதி ஆனந்த் குழு 50,000 பக்கங்கள் கொண்ட அறிக்கையை சீலிடப்பட்ட கவரில் வைத்து உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.
அந்த அறிக்கையை டிஜிட்டல்மயமாக்க இன்று 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சட்ட பெஞ்ச் உத்தரவிட்டது. இதன்மூலம் அந்த அறிக்கையின் விவரத்தை எளிதாகப் படிக்க முடியும் என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
நீதிபதி ஆனந்த் குழுவின் அறிக்கையை தமிழகம் மற்றும் கேரளாவுக்கு 10 நாட்களுக்குள் வழங்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேலும் வழக்கு விசாரணையை அக்டோபர் 5ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.












Click it and Unblock the Notifications