சஹானாஸ் உள்பட 25 பெண்களை ஆபாசப் படம் பிடித்த சூப்பர் மார்க்கெட் உரிமையாளர் சிக்குவாரா?

கேரளாவைச் சேர்ந்த பெண் சஹானாஸ் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். 50க்கும் மேற்பட்ட ஆண்களை மோசடியாக திருமணம் செய்ததாக அவர் மீது, அவரது கணவர்கள் என்று கூறப்படும் சிலர் புகார் கொடுத்துள்ளனர். இதையடுத்து சஹானாஸ் தலைமறைவாகி விட்டார். அவரைப் போலீஸார் தேடி வருகின்றனர்.
இந்த நிலையில் வாரப் பத்திரிக்கை ஒன்றுக்கு சஹானாஸ் அளித்த பேட்டியில் தன் மீதான புகார்களை திட்டவட்டமாக மறுத்தார். தனது இந்த நிலைக்குக் காரணம், தான் முன்பு வேலை பார்த்து வந்த சூப்பர் மார்க்கெட் ஒன்றின் உரிமையாளர்தான் காரணம் என்றும் கூறியுள்ளார்.
அந்த கடையில் தான் வேலை பார்த்தபோது உடை மாற்றும் அறைக்குள் ரகசிய கேமராவை வைத்து தன்னை நிர்வாணமாக அவர் பிடித்தார் என்றும், இதைக் காட்டி தனது காம இச்சையைத் தீர்த்துக் கொள்ள முயன்றார் என்றும், அதற்கு தான் உடன்படாததால் சிலரைத் தூண்டி விட்டு தனது கணவர்கள் என்று கூறிப் புகார் கொடுக்கத் தூண்டி விட்டுள்ளதாகவும் கூறியுள்ளார் சஹானாஸ்.
மேலும் தன்னைப் போல 25க்கும் மேற்பட்ட பெண்களை அந்த கடை உரிமையாளர் சீரழித்து வருவதாகவும் கூறியிருந்தார் சஹானாஸ். இதையடுத்து சம்பந்தப்பட்ட கடை உரிமையாளரைப் பிடித்து விசாரிக்க போலீஸார் தீர்மானித்துள்ளதாக தெரிகிறது.
இதற்கிடையே, சென்னைப் புறநகர் ஒன்றில்தான் சஹானாஸ் பதுங்கியிருப்பதாக கூறப்படுகிறது. அங்குள்ள அவரது தோழியின் வீட்டில் அவர் அடைக்கலம் புகுந்திருப்பதாகவும் தெரிகிறது. இதையடுத்து அந்தத் தோழி யார், அவரது வீடு எங்கு உள்ளது என்பது குறித்து போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். அவர் வேறு எங்காவது தப்பி விடாத வகையில் தீவிரக் கண்காணிப்பையும் முடுக்கி விட்டுள்ளதாக தெரிகிறது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications