கிரானைட் கொள்ளை கம்பெனியில் பார்ட் டைம் வேலை பார்த்த 3 கனிம வள அதிகாரிகள் கைது
சென்னை: கிரானைட் கொள்ளையில் ஈடுபட்ட கம்பெனியில் பகுதி நேரமாக பணிபுரிந்து கொள்ளைக்கு உடந்தையாக இருந்த கனிம வளத்துறை அதிகாரிகள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மதுரை சுற்றுவட்டாரத்தில் பல ஆயிரம் கோடி ரூபாய் அளவில் நிகழ்ந்திருக்கும் கிரானைட் கொள்ளை தமிழகத்தையே உலுக்கி வருகிறது. இந்த கொள்ளை தொடர்பாக கிரானைட் உரிமையாளர்கள் மட்டுமின்றி பல அதிகாரிகளும் சிக்கி வருகின்றனர்.
இந்நிலையில் கிரானைட் கொள்ளை முறைகேடுக்கு உதவி புரிந்ததாகக் குற்றம்சாட்டி தமிழக அரசின் கனிமவளத்துறை அதிகாரிகள் மூன்று பேரை காவல்துறையினர் இன்று கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட மூவரும் கிரானைட் கொள்ளையில் ஈடுபட்ட ஒலிம்பஸ் நிறுவனத்தில் பகுதி நேரமாக பணிபுரிந்தவர்கள் என்ற குற்றச்சாட்டு எழுந்த நிலையில் இவர்கள் சிக்கியுள்ளனர்.
இதனிடையே கிரானைட் கொள்ளையர்களால் கபளீகரம் செய்யப்பட்ட தங்களது நிலத்தை மீட்டுத் தருமாறு மதுரை மாவட்ட ஆட்சியரிடம் இன்று 42 பேர் புகார் மனு கொடுத்துள்ளனர். இதில் காவல்துறையில் பணியாற்றுகிறவர்களும் அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications