பார்லி.தேர்தலில் 15 இடங்களை கைப்பறிடுவோம்...: ஜி.கே. மணி நம்பிக்கை

மதுரையில் சனிக்கிழமையன்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
தமிழகத்தில் மின்வெட்டால் தொழிற்சாலைகள், பொதுமக்கள், விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். நெய்வேலியில் உற்பத்தியாகும் மின்சாரம் முழுவதையும் தமிழகத்திற்கு வழங்க வேண்டும். புதிய மின் இணைப்புகளுக்கான கட்டணத்தை உயர்த்தக் கூடாது.
மழை இல்லாததால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க தமிழக அரசு மத்திய அரசை வலியுறுத்த வேண்டும். வறட்சி மாநிலமாக மத்திய அரசு அறிவிக்கவேண்டும். தமிழக மீனவர்கள் கொல்லப்படுவதை மத்தியஅரசு தடுத்திட கச்சத்தீவை திரும்பப்பெற வேண்டும்.
கிரானைட் முறைகேடுகளில் அனைத்து உண்மைகளையும் கண்டறிய வேண்டும். பாட்டாளி மக்கள் கட்சி தேர்தலில் தனித்து போட்டியிடும் என ஏற்கனவே அறிவித்துள்ளது. ஆட்சி மாற்றம் தேவை என தமிழக மக்கள் விரும்புகிறார்கள். மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் 39 தொகுதிகளில் 15 இடங்களில் நாங்கள் வெற்றி பெறுவோம் என்றார் ஜி.கே. மணி.












Click it and Unblock the Notifications