பிபிஏ மாணவர் 16 துண்டுகளாக வெட்டிக் கொலை: தலையைக் காணவில்லை
டெல்லி: டெல்லியில் உள்ள கணேஷ் நகர் ரயில் நிலையத்தில் பிபிஏ இறுதியாண்டு மாணவரின் உடல் 16 துண்டுகளாகக் கிடந்தது. அவரது தலையைக் காணவில்லை.
மேற்கு டெல்லி மீனாக்ஷி கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் பாராஸ் பாசின்(23). இறுதியாண்டு பிபிஏ மாணவர். அவர் ஒரு பணக்கார வீட்டுப் பெண்ணை காதலித்து கடந்த ஆண்டு மே மாதம் 9ம் தேதி ரகிசயமாக திருமணம் செய்துள்ளார். இதற்கு பெண் வீட்டார் கடும் எதிர்ப்பு தெரிவித்து பெண்ணை தங்களுடனேயே காசியாபாத்தில் வைத்துக் கொண்டனர். தனது பெற்றோருக்கு தெரியாமல் அவர் தனது கணவரை ரகசியமாக சந்தித்து வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த சனிக்கிழமை மதியம் ஒரு மணிக்கு அவரது மனைவி தனது பெற்றோர் அவரை அசிங்கப்படுத்தியதற்காக மன்னிப்பு கேட்டு எஸ்.எம்.எஸ். அனுப்பியுள்ளார். அதன் பிறகு தனது மனைவியை வீட்டுக்கு அழைத்து வர வழக்கறிஞரைப் பார்த்துப் பேச அவர் மதியம் 3.30 மணிக்கு வெளியே சென்றுள்ளார். 4 மணிக்கு அவர் இறந்துள்ளார். இந்நிலையில் யாரோ ஒரு நபர் பாசினின் பெற்றோரை செல்போனில் தொடர்பு கொண்டு அவரது உடல் கிடக்கும் இடத்தை தெரிவி்த்துள்ளார். அதுவும் 30 நிமிடத்தில் 15 தடவை போன் செய்துள்ளார்.
இதையடுத்து அவர்கள் கணேஷ் நகர் ரயில் நிலையம் அருகே பாசினின் உடல் 16 துண்டுகளாகக் கிடந்ததுள்ளதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அவரது தலையைக் காணவில்லை. அவரை பாசினின் மனைவி வீட்டார் தான் வெட்டிக் கொலை செய்துள்ளனர் என்று அவரது குடும்பத்தினர் போலீசில் புகார் கொடுத்தனர்.
பாசினின் கைகள் ஒரு இடத்திலும், கால்கள் ஒரு இடத்திலும் கிடந்துள்ளது. அவரது செல்போன் சிம்கார்டுடன் நசுங்கிக் கிடந்துள்ளது. அவரை கொன்று ரயிலில் எறிந்திருக்கலாம் என்று பாசின் குடும்பத்தார் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து பாசினின் சகோதரி சுர்பி கூறுகையில், கடந்த 3 நாட்களுக்கு முன்பு தான் அந்த பெண்ணின் பெற்றோர் அவரை அவர்கள் வீட்டுக்கு வரவழைத்து மிரட்டினர் என்றார். எனது மகனை அவர்கள் துண்டு துண்டாக வெட்டிப்போவதாக மிரட்டியபோது ஏதோ ஆத்திரத்தில் சொல்கிறார்கள் என்று நினைத்தோம் என்று பாசினின் தந்தை சஞ்சீவ் பாசின் தெரிவித்தார்.
பாசின் தனது மனைவியின் பெயரை கையில் டாட்டூ குத்தியிருந்தார். அதை வைத்து தான் அவரது உடல் அடையாளம் காணப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சம்பவம் ஒரு விபத்து என்று தெரிவித்துள்ள போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாசின் தனது மனைவியை கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு டியூஷன் சென்டரில் வைத்து பார்த்து காதலில் விழுந்துள்ளார். அப்போது அந்த பெண்ணின் குடும்பத்தார் மேற்கு டெல்லியில் உள்ள திலக் நகரில் வசித்தனர். அந்த பெண் வீட்டார் காசியாபாத் சென்ற பிறகும் அவர்கள் காதலைத் தொடர்ந்தனர் என்று பாசின் குடும்பத்தார் தெரிவித்தனர்.
-
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை












Click it and Unblock the Notifications