5ம் தேதி திருச்செந்தூர் கோவிலில் ஆவணி திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்
திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவில் ஆவணி திருவிழா வரும் 5ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
முருகனின் அறுபடை வீடுகளில் 2வது படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவிலில் நடைபெறும் முக்கிய திருவிழாக்களில் ஆவணி திருவிழாவும் ஒன்று. இந்தாண்டு திருவிழா வரும் 5ம் தேதி தொடங்கி 16ம் தேதி வரை நடைபெறுகிறது. இதையொட்டி 5ம் தேதி அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு 1.30 மணிக்கு விஸ்வருப ஆராதனை, 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் ஆகியவை நடக்கிறது. காலை 5.30 மணிக்கு திருவிழா கொடியேற்றப்படுகிறது.
5ம் நாள் திருவிழாவான 9ம் தேதி இரவு 7.30 மணிக்கு சிவன் கோவிலில் சுவாமிக்கு குடவருவாயில் தீபாராதனை நடக்கிறது. 7ம் நாள் திருவிழாவான 11ம் தேதி காலை 5.30 மணிக்குள் சுவாமி ஆறுமுகநயினார் உருகுசட்ட சேவையும், 8.45 மணிக்கு சண்முகவிலாசத்திலிருந்து சுவாமி வெற்றிவேர் சப்பரத்தில் வீதி உலாவும், மாலை 4.30 மணிக்கு சிவப்பு சாத்தி வீதி உலாவும் நடக்கிறது.
8ம் நாள் திருவிழாவான 12ம் தேதி காலை 5 மணிக்கு சுவாமி வெள்ளி சப்பரத்தில் வீதி உலா, காலை 10.45க்கு சுவாமி ஆறுமுகநயினார் பச்சை சாத்தி எழுத்தருளல் நடக்கிறது. 10ம் நாள் திருவிழாவான 14ம் தேதி காலை 7 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. திருவிழாக்காலங்களில் சுவாமி, அம்பாள் தினமும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா வரும் நிகழ்ச்சிகள் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications