பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து வெளியேற சீனாவிடம் இந்தியா வலியுறுத்தல்: அந்தோணி தகவல்
டெல்லி: பாகிஸ்தான் ஆக்கிரமித்திருக்கும் காஷ்மீரப் பகுதியில் இருந்து சீனா வெளியேற வேண்டும் என்று வலியுறுத்தியிருப்பதாக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே. அந்தோணி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற மக்களவையில் இது தொடர்பாக எழுத்துப்பூர்வமாக பதிலளித்துள்ல அந்தோணி, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரத்தில் சீனாவின் செயல்பாடுகள் குறித்து இந்தியாவின் கவலை தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அப்பகுதியில் எந்த ஒரு நடவடிக்கையையும் மேற்கொள்ளக் கூடாது என்றும் வலியுறுத்தப்பட்டிருக்கிறது என்றார்.
மேலும் எல்லைப் பகுதிகளிலும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரத்திலும் உள்கட்டமைப்பு பணிகளை சீனா மேற்கொண்டு வருவதை இந்தியா அறிந்திருக்கிறது. ஆனால் இந்திய எல்லைக்குள் கடந்த 3 ஆண்டுகளாக சீனா ஊடுருவல் எதனையும் நிகழ்த்தவில்லை என்றார்.
ஜம்மு காஷ்மீரில் 1962-ம் ஆண்டிலிருந்து 38 ஆயிரம் சதுர கிலோ மீட்டரை சீனா ஆக்கிரமித்திருக்கிறது என்றும் பாகிஸ்தான் ஆக்கிரமித்த காஷ்மீரப் பகுதியிலிருந்து 5180 சதுர கிலோ மீட்டர் பரப்பளவை சீனாவுக்கு பாகிஸ்தான் கொடுத்திருக்கிறது என்றும் ஏ.கே. அந்தோணி தமது பதிலில் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டின் கிழக்குப் பகுதியில் அருணாசலப் பிரதேசத்தில் 90 ஆயிரம் சதுர கிலோமீட்டர் பரப்பு தங்களுக்குரியது என்று சீனா உரிமை கொண்டாடி வருகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.
-
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம்












Click it and Unblock the Notifications