தண்ணியைப் போட்டு வண்டி ஓட்டுனா எல்லா ஊர்லயும் இப்படித்தான் அடிப்பாங்க போல!
மாஸ்கோ: ரஷ்யாவில் குடிபோதையில் குண்டக்க மண்டக்க புல்டோசரை ஓட்டி பல கார்களை சேதப்படுத்திய டிரைவரை, அங்கிருந்தவர்கள் மடக்கிப் பிடித்து சரமாரியாக தர்ம அடி கொடுத்து வண்டியை விட்டு கீழே இறக்கினர்.
குடிபோதையில் வண்டி ஓட்டுவது உலகம் முழுவதும் படு சாதாரணம். அவர்களால் விபத்துக்கள் நடப்பதும், உயிரிழப்பு, படுகாயம், சேதம் ஆகியவை ஏற்படுவதும் படு சாதாரணமாகி விட்டது.
இந்த நிலையில் ரஷ்யாவில் ஒரு புல்டோசர் டிரைவர், குடிபோதையில் குண்டக்க மண்டக்க ஓட்டி ஏகப்பட்ட கார்களை நாஸ்தி செய்து விட்டார். இதனால் ஆத்திரமடைந்தவர்கள் புல்டோசரில் ஏறி அந்த டிரைவரா உண்டு இல்லை என்று செய்து விட்டனர். அப்படியும் கோபாம் தீராமல் கீழே இறக்கிப் போட்டும் அடித்துத் துவைத்தெடுத்து விட்டனர்.
சம்பவத்தின்போது ஒரு புல்டோசர் அங்குமிங்குமாக ஒரு சீரில்லாமல் வந்ததை சிலர் பார்த்து குழம்பி நின்றனர். நல்ல வேகத்திலும் அந்த புல்டோசர் வந்தது. அது ஒரு ஷாப்பிங் வளாகமாகும். அங்கு ஏகப்பட்ட கார்களை பார்க் செய்து நிறுத்தி வைத்திருந்தனர். யானை கரும்புக் காட்டுக்குள் புகுந்தால் என்னாகும்... அது போல, அந்த புல்டோசர் பார்க்கிங் லாட்டில் இருந்த கார்களை சரமாரியாக நொறுக்கித் தள்ளியபடி சென்றது.
இதைப் பார்த்து காரின் உரிமையாளர்களும், அங்கு நின்றிருந்தவர்கள் கடும் கோபமடைந்தனர். வேகமாக ஓடி வந்த அவர்கள் புல்டோசரை நிறுத்தினர். பின்னர் அதில் சிலர் ஏறி டிரைவரைப் போட்டு சாத்தினர். பின்னர் டிரைவரை கீழே இறக்கிக் கொண்டு வந்து அத்தனை பேரும் சேர்ந்து குமுறி விட்டனர். அந்த டிரைவர் குடிபோதையில் இருந்தது தெரிய வந்தது. இந்த தர்ம அடி காட்சியை சிலர் யூடியூபில் போட்டுள்ளனர்.
'சேம் பிளட்'.. பாரபட்சமே இல்லாம எல்லா ஊர்லயும் ஒரே மாதிரிதான் தர்ம அடி கொடுக்கிறாங்க போல...!
-
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம்












Click it and Unblock the Notifications