பீகாரிகள் மும்பையில் நுழைய "பெர்மிட்" வாங்க வேண்டும்: உத்தவ் தாக்கரே

சிவசேனாவின் "சாம்னா" பத்திரிகையில் உத்தவ்தாக்கரே கூறியுள்ளதாவது:
பீகார் முதல்வர் நிதீஷ் குமார், நம்பிக்கைத் துரோகிகளுக்குத் தொடர்ந்து ஆதரவளித்து வருவாரானால் வரும் மக்களவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக நிதீஷ் குமாரை சிவசேனா கட்சி ஏற்காது.
அசாம் கலவரம் தொடர்பாக மும்பையில் நடைபெற்ற பேரணியின்போது ஏற்பட்ட வன்முறையில் பீகாரி ஒருவருக்கு தொடர்பிருப்பதை நிதீஷ் குமார் அவமானமாகக் கருதவேண்டும். ஆசாத் மைதானத்தில் நடைபெற்ற பேரணியின்போது ஏற்பட்ட வன்முறை தொடர்பாக பீகாரி ஒருவர் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் நிதீஷ் குமார் பிரச்னையைக் கிளப்பிவிட்டுள்ளார்
மும்பையில் குற்றத்தில் ஈடுபட்டுவிட்டு பீகாருக்கு ஓடிவிடும் ஒருவரைப் பிடிக்க பீகார் போலீஸின் அனுமதியை மும்பை போலீஸ் பெற வேண்டும் என்றால், இனிமேல் பீகாரில் இருந்து மும்பை வருபவர்கள் தங்களின் விவரங்களை பதிவு செய்ய வேண்டும், பெர்மிட் பெற வேண்டும் என்றும் அதில் உத்தவ் தாக்கரே கூறியுள்ளார்.
சிவசேனாவில் இருந்து பிரிந்த ராஜ் தாக்கரேவின் செல்வாக்கு வேகமாக வளர்ந்து வருவதால் இதுபோன்ற பிரிவினைவாத பேச்சை வைத்தே தனது செல்வாக்கை நிலை நிறுத்த வேண்டிய நிலைக்கு பால் தாக்கரேயும் அவரது மகன் உத்தவ் தாக்கரேயும் தள்ளப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
உத்தவ் கருத்தை பாஜக ஏற்கவில்லையாம்..
இந் நிலையில் பாஜக செய்தித் தொடர்பாளர் ஷா நவாஸ் உசைன் கூறுகையில், பாஜகவின் முந்தைய அமைப்பான ஜன சங், ஜம்மு-காஷ்மீரில் நடைமுறையில் இருந்த அனுமதி முறையை எதிர்த்துப் போராடியது. காஷ்மீரில் நுழைவதற்கு அனுமதி பெற வேண்டும் என்ற நடைமுறையை எதிர்த்து தனது வாழ்க்கையையே தியாகம் செய்தவர் கட்சியின் நிறுவனரான ஷியாமா பிரசாத் முகர்ஜி.
எனவே மகாராஷ்டிரம் செல்வதற்கு அனுமதி முறை தேவையில்லை. எனவே உத்தவ் தாக்கரேவின் கருத்தை ஏற்க முடியாது. ஒவ்வொரு பீகாரிக்கும் நாட்டின் அனைத்துப் பகுதிகளுக்கும் செல்லும் உரிமையிருக்கிறது என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications