வாலிபருடன் செக்ஸ்: 16 வயது பெண்ணுக்கு 100 கசையடி- மாலத்தீவு நீதிமன்றம்

Subscribe to Oneindia Tamil

மாலே: உடலுறவு வைத்துக் கொண்டதற்காக 16 வயது பெண்ணுக்கு 100 கசையடி கொடுக்கமாறு மாலத்தீவு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அந்த பெண் 18 வயதை அடைந்ததும் இந்த தண்டனை நிறைவேற்றப்படும்.

மாலத்தீவைச் சேர்ந்த 16 வயது பெண் 29 வயது வாலிபருடன் உடலுறவு கொண்டுள்ளார். தலைநகர் மாலேவில் இருந்து சுமார் 200 கிமீ தொலைவில் உள்ள ரா அடால் என்ற இடத்தில் அவர்கள் உறவு கொண்டுள்ளனர். அங்குள்ள சில புதர்களுக்கு பின் இருந்து அவர்கள் கண்டிபிடிக்கப்பட்டனர். இதையடுத்து அந்த பெண்ணின் பெற்றோர் போலீசில் புகார் கொடுத்தனர். அவர்களின் புகாரின்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். அந்த வாலிபரிடம் விசாரித்ததில் தான் உறவு கொள்ளவேயில்லை என்று சாதித்தார். ஆனால் அந்த பெண் உறவு கொண்டதை ஒப்புக் கொண்டார்.

இந்த வழக்கை விசாரித்த உள்ளூர் நீதிமன்றம் மைனருடன் உறவு வைத்த குற்றத்திற்காக அநத வாலிபருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், அந்த பெண்ணுக்கு 100 கசையடியும் கொடுக்குமாறு உத்தரவிட்டது. அந்த பெண் 18 வயதை அடைந்த பிறகே இந்த தண்டனை நிறைவேற்றப்படும்.

மாலத்தீவில் கிராமத்து தலைவர்கள் கசையடி தண்டனை வழங்குவது சாதாரணமாகும். பிரம்பை வைத்து குற்றவாளிகளை அடிப்பார்கள் என்பது குறப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+