ஜாமீன் கோரிய ஷானாஸின் மனுக்கள் மீதான விசாரணை நாளைக்கு ஒத்திவைப்பு

திருமண மோசடி தொடர்பாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள இளம் பெண் ஷானாஸ் சென்னைம முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி 4 மனுக்களைத் தாக்கல் செய்துள்ளார்.
அடையாறு, மாம்பலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையங்களில் முறையே ராஜா மற்றும் சரவணன் ஆகியோர் கொடுத்த புகார்கள் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் ஜாமீன் கேட்டு இரு மனுக்களையும், பின்னர், அடையாறு, மாம்பலம் சட்டம்-ஒழுங்கு போலீஸ் நிலையங்களில் வழக்குப்பதிவு செய்துள்ளதாகவும், அந்த வழக்குகளில் தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று கோரி மேலும் 2 மனுக்களையும் அவர் தாக்கல் செய்துள்ளார்.
அதில், என் மீது ராஜா, சரவணன் ஆகியோர் திருமண மோசடி புகார் கொடுத்துள்ளனர். இதன் அடிப்படையில் என் மீது 4 போலீஸ் நிலையங்களில் வழக்குப்பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. எனக்கும், அந்த குற்றச்சாட்டுக்கும் தொடர்பு இல்லை. என் மீது பொய்ப் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
நான் தற்போது 5 மாத கர்ப்பிணியாக உள்ளேன். எனவே என்மீது 4 போலீஸ் நிலையங்களில் பதிவாகியுள்ள வழக்குகளில் ஜாமீன் வழங்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த 4 மனுக்கள் எல்லாம் முதன்மை அமர்வு நீதிபதி பொன்.கலையரசன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஷானாஸ் சார்பில் வழக்கறிஞர் சிவா ஆஜரானார். அரசுத் தரபப்ில் வக்கீல் ஜெகன் ஆஜரானார். அவர் நீதிபதியிடம் கூறுகையில், மாம்பலம், அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையங்களில் ஷானாஸ் மீது வழக்குகள் எதுவும் பதிவாகவில்லை.
அடையாறு, மாம்பலம் சட்டம்-ஒழுங்கு போலீஸ் நிலையத்தில் இருந்து எந்த தகவலும் வரவில்லை. மனு மீதான விசாரணையை தள்ளிவைக்க வேண்டும் என்றார்.
அப்போது சென்னை உயர்நீதிமன்ற பெண் வக்கீல்கள் சங்கத் தலைவர் பிரசன்னா ஆஜராகி, தன்னை வக்கீல் என்று கூறி மோசடி செய்துள்ளார் ஷானாஸ். இதன் மூலம் அவர் பெண் வக்கீல்கள் சமுதாயத்துக்கே களங்கம் ஏற்படுத்தி விட்டார். எனவே அவருக்கு முன்ஜாமீன் வழங்கக் கூடாது என்று கோரி நாங்கள் மனு செய்யவுள்ளோம். அதற்கு அனுமதி தர வேண்டும் என்று கோரினார். இந்தக் கோரிக்கையை நீதிபதி ஏற்றார்.
அதேசமயம், அடையாறு சரவணன் சார்பில் ஆஜரான வக்கீல் கூறுகையில், ஷானாஸுக்கு ஜாமீன் தருவதை எதிர்த்து மனு தாக்கல் செய்யவுள்ளதாக கூறினார். இதையடுத்து இன்றைக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.
இன்று மீண்டும் மனுக்கள் விசாரணைக்கு வந்தன. அப்போது அரசுத் தரப்பில்,
அடையாறு சரவணன் ஷானாஸ் மீது புகார் தரவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சரவணன் கொடுத்த புகாரின் தன்மை என்ன, எங்கு புகார் கொடுத்தார் என்பது குறித்து விளக்கம் அளித்து தெளிவுபடுத்த உத்தரவிட்ட நீதிபதி நாளைக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications