சிவகாசியில் சரியான மருத்துவமனைகள் இல்லை விருதுநகர் எம்.எல்.ஏ, எம்.பி புகார்
சிவகாசி : சிவகாசி, விருதுநகரில் தீக்காய சிகிச்சைப் பிரிவை குணப்படுத்த சரியான மருத்துவ வசதி இல்லை என்று விருதுநகர் சட்டமன்றத் தொகுதியின் தே.மு.தி.க எம்.எல்.ஏ மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 25 பேர்வரை உயிரிழந்துள்ளனர். 400க்கும் மேற்பட்டோர் இடிபாடுகளில் சிக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அடிக்கடி சிவகாசி சுற்றுவட்டாரப்பகுதிகளில் வெடி விபத்து ஏற்படுவது தொடர்கதையாகிவருகிறது. உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. இந்த விபத்துகளை கையாள்வதற்கு சரியான வசதிகள் எதுவும் விருதுநகர், சிவகாசி பகுதிகளில் இல்லை என்பது வேதனையான அம்சம்.
தீயணைப்பு, சரியான மருத்துவ வசதி எதுவும் இல்லை என்பது நீண்ட நாள் புகாராகும். விருதுநகரிலும், சிவகாசியிலும் இது குறித்த மருத்துவ வசதி ஏற்படுத்த வேண்டும் என்று பலமுறை கோரிக்கை விடுத்தும் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று விருதுநகர் சட்டமன்ற உறுப்பினரும், விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினரும் புகார் தெரிவித்துள்ளனர்.
தொலைக்காட்சி ஒன்றுக்கு தொலைபேசி மூலம் பேட்டியளித்த தேமுதிக சட்டமன்ற உறுப்பினர் மாஃபா பாண்டியராஜன், ஊழல் காரணமாகவும், அரசு அதிகாரிகளின் அலட்சியம் காரணமாக இந்த தொகுதியில் தீக்காய சிகிச்சைப்பிரிவு மருத்துவமனை எதுவும் ஏற்படுத்தப்படவில்லை என்று புகார் கூறியுள்ளார்.
இதனால் காயமடைந்தவர்களை மதுரைக்கு கொண்டு செல்ல வேண்டியுள்ளது. இதனால் உயிரிழப்பு அதிகமாகிறது என்பது இவர்களின் குற்றச்சாட்டாகும்.
இதேபுகாரினை விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் கூறியுள்ளார். இதுநாள் வரை ஆட்சியில் இருந்தவர்களும், இப்பொழுது ஆட்சியில் இருப்பவர்களும் இதை கவனத்தில் கொண்டால் மட்டுமே பட்டாசு வெடி விபத்துக்களில் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க முடியும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications