Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சிவகாசி விபத்து: இறந்தோர் குடும்பத்துக்கு பிரதமர், ஜெயலலிதா தலா ரூ.2 லட்சம் நிவாரணம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: சிவகாசி பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் பலியானவர்களின் குடும்பத்திற்கு பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, தமிழக முதல்வர் ஜெயலலிதா ஆகியோர் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துள்ளனர். மேலும் இறந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் வீதம் நிவாரணம் வழங்கப்படும் என்று பிரதமர் அறிவித்துள்ளார்.

சிவகாசி பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 54 பேர் பலியாகினர். மேலும் 60 பேர் படுகாயமடைந்துள்ளனர். தேசிய அளவில் சோகத்தை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவத்திற்கு பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, தமிழக முதல்வர் ஜெயலலிதா, மாநில ஆளுநர் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து பிரதமர் மன்மோகன் சிங் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

சிவகாசி பட்டாசு ஆலை தீவிபத்தில் பலர் பலியானதாக அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். இதனால் தமிழக மக்களுக்கு ஏற்பட்டுள்ள துயரத்திற்கு, எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்து கொள்கிறேன். விபத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் வீதமும், படுகாயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் வீதமும் நிவாரண உதவி வழங்கப்படும் என்று அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

சிவகாசி பட்டாசு ஆலை தீவிபத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்து கொள்கிறேன். மேலும் விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய நான் கடவுளை வேண்டி கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

தமிழக ஆளுநர் கே.ரோசய்யா கூறுகையில், வெடி விபத்தில் ஏராளமானோர் பலியானார்கள் என்ற செய்தி அறிந்து மிகவும் அதிர்ச்சி அடைந்தேன். விபத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

இது குறித்து முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள முதலிப்பட்டி கிராமத்தில் செயல்பட்டு வரும் தனியார் பட்டாசு தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் பலர் உயிரிழந்தனர் என்ற செய்தியைக் கேட்டு நான் ஆழ்ந்த வருத்தமும், மிகுந்த மன வேதனையும் அடைந்தேன்.

இந்த வெடி விபத்தில் அகால மரணமடைந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், இந்த வெடி விபத்தில் 78 நபர்கள் காயம் அடைந்துள்ளனர் என்பதை அறிந்து நான் மிகவும் வருத்தமடைந்தேன்.

மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வரும் இவர்கள் அனைவருக்கும் நல்ல முறையில் சிகிச்சை அளிக்க மருத்துவமனை அதிகாரிகளுக்கும், விருதுநகர் மாவட்ட நிர்வாகத்திற்கும் நான் உத்தரவிட்டுள்ளேன். மேலும், மதுரையில் இருந்து மருத்துவர்கள் குழு ஒன்றை அனுப்பி இவர்களுக்கு சிகிச்சை அளிக்கவும் நான் உத்தரவிட்டுள்ளேன். மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்கள் அனைவரும் விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்ற என்னுடைய விருப்பத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த துயரச் சம்பவம் குறித்து எனக்குத் தகவல் கிடைத்தவுடன், அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விசுவநாதன், கே.பி.முனுசாமி, ஆர்.வைத்திலிங்கம், கே.டி.ராஜேந்திர பாலாஜி மற்றும் செல்லப்பாண்டியன் ஆகியோரை உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரையும் மற்றும் காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருபவர்களையும் நேரில் சந்தித்து ஆறுதல் கூற நான் அனுப்பி வைத்துள்ளேன்.

இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பங்கள் ஒவ்வொன்றுக்கும் தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.25 ஆயிரமும், லேசான காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.10 ஆயிரமும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+