இந்தியாவில் படித்தவர் நேபாள ராணுவ தளபதியாக நியமனம்
காத்மாண்டு: இந்தியாவில் பட்டப்படிப்பை முடித்த கவுரவ் ஷம்ஷேர் ராணா என்பவர் நேபாள நாட்டின் புதிய ராணுவ தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
நேபாள நாட்டின் புதிய ராணுவ தளபதியாக கவுரவ் ஷம்ஷேர் ராணா என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தனது பட்டப்படிப்பை இமாச்சலப்பிரதேசம் மாநிலத்தின் சனாவரில் உள்ள லாரன்ஸ் பள்ளியில் படித்தவர். மேலும் இங்கிலாந்தில் உள்ள ராயல் மிலிட்டரி அகடமியில் ராணுவ பயிற்சி முடித்தவர்.
கடந்த 1970ம் ஆண்டு ராணுவத்தில் சேர்ந்த ராணா 39 ஆண்டுகளாக பணியாற்றினார். இவர் கடந்த 1901 முதல் 1930ம் ஆண்டு வரை நேபாள பிரதமராக இருந்த சந்திர ஷம்ஷேர் ராணாவின் கொள்ளு பேரன் ஆவார். மேலும் ராணாவின் தந்தை முன்னாள் ராணுவ மேஜர் ஜெனரலாக பணியாற்றி உள்ளார்.
இந்த நிலையில் நேபாள ராணுவ தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் கவுரவ் ஷம்ஷேர் ராணா புதிய ராணுவ தளபதியாக நியமிக்கப்பட்டார்.












Click it and Unblock the Notifications