மீண்டும் 'மேட் இன் அமெரிக்கா' பெருமை திரும்பும் - ஒபாமா!

தனது ஏற்புரையின், "கடந்த நான்கு ஆண்டுகளாக அமெரிக்காவிற்கு தொழிற்சாலைகள் மீண்டும் திரும்பி வருகின்றன. 500 ஆயிரம் தொழிற்சாலை வேலைகள் புதிதாக உருவாகியுள்ளன. இன்னும் மில்லியன் கணக்கில் இந்த வேலைகள் உருவாகும், உயர் தரமான 'மேட் இன் அமெரிக்கா' பொருட்கள் மீண்டும் பெருமளவில் சந்தைக்கு வரும்," என்றார்.
சீனத் தயாரிப்புகள் முழுமையாக அமெரிக்க சந்தைகளை ஆக்கிரமித்து இருக்கும் வேளையில் ஒபாமாவின் இந்த பேச்சுக்கு முக்கியத்துவம் கிடைத்துள்ளது.
ஒசாமா இல்லை, ஜி எம் மோட்டார்ஸ் இருக்கிறது!
அவரது பேச்சு:
அமெரிக்கர்களை கொன்று குவித்த ஒசாமா பின்லேடனை வீழ்த்துவோம் என்று சொல்லி வாக்குப் பெற்றேன். அதை நிறைவேற்றினேன். அதே சமயத்தில், திவாலாகும் நிலையில் இருந்த ஜி.எம் மோட்டார்ஸ் கார் நிறுவனத்தை காத்து மில்லியன் தொழிலாளர்களின் வாழ்க்கையில் ஒளியேற்றியுள்ளேன். இன்று ஓசாமா இல்லை ஆனால் ஜி,எம், மோட்டார்ஸ் இருக்கிறது.
ஈராக் யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருவேன் என்று சொன்னேன். அதை செய்து முடித்தேன். ஆப்கானிலிருந்து நமது படையினர் 2014 ல் திரும்ப வருவார்கள் என்று இப்போது உறுதி கூறுகிறேன். போர் செலவுகளை தடுத்து அதை பொருளாதாரத்திற்கு திருப்பியுள்ளேன்.
கடந்த நான்கு ஆண்டுகளில் எண்ணெய் இறக்குமதி பெருமளவில் குறைந்துள்ளது. சோலார், பயோ ஃப்யூயல் என புதிய எரிசக்தி தொழில் நுட்பங்கள் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கி வருகிறது.
அமெரிக்க வருங்காலத்தை நிர்ணயிக்கப் போவது கல்விதான். அதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். கணக்கு, அறிவியல் வளர்ச்சிக்காக அடுத்த பத்தாண்டுகளில் 100 ஆயிரம் ஆசிரியர்கள் உருவாக்கப் படுவார்கள். அறிவியல் கண்டுபிடிப்புகள்தான் அமெரிக்காவின் உயிர்த்துடிப்பு. அது தொடர்ந்து முதல் நிலையில் இருக்க அனைத்து முயற்சிகளும் செய்து வருகிறோம்.
2008 ல் பதவியேற்ற போது அமெரிக்கா இரண்டாவது மிகப்பெரிய பொருளாதார வீழ்ச்சியில் இருந்தது. அதை தடுத்து நிறுத்து இன்று முன்னேற்றப் பாதைக்கு திருப்பியுள்ளோம். எல்லாவற்றையும் இன்னும் நிறைவேற்றவில்லை.
அனைத்தையும் ஒரே நாளில் நிறைவேற்றி விட முடியாது என்று எனக்கு தெரியும். யாரையும் பின்னால் விட்டு விடாமல், அனைவரும் ஒன்றாக முன்னேற்ற பாதையில் செல்லுவோம், அந்த பணியில் இன்னும் நான்கு ஆண்டுகள் தொடர்ந்து செய்வதற்காக உங்களின் வாக்குகளை கேட்கிறேன்," என்று வேண்டுகோள் விடுத்தார்.
நாளைக்கு ஸ்கூல் போகணும்!
ஒபாமா பேசுவதை கேட்பதற்காக அவரது இரு மகள்களும் மாநாட்டிற்கு இன்று வந்திருந்து முன் வரிசையில் இருந்து கேட்டுக் கொண்டிருந்தனர்.
தொடக்கத்தில், தன்னை பேச அழைத்த மனைவி மிஷல் ஒபாமாவுக்கு நன்றி சொன்ன கையோடு, மகள்களை பார்த்து பெருமைப் படுவதாக சொன்னார்.
அத்துடன், மாநாட்டிற்கு வந்து விட்ட்தால் மறுநாள் வெள்ளிக்கிழமை பள்ளிக்கு மட்டம் போட்டு விட முடியாது என்று 'நாளை பள்ளிக்கு போக வேண்டும்' என்றும் நினைவுபடுத்தினார்.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications