கூடங்குளத்தில் இன்று முற்றுகைப் போராட்டம்- பொறுப்பேற்க உதயகுமாருக்கு ஆட்சியர் நோட்டீஸ்
திருநெல்வேலி: கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று முற்றுகைப் போராட்டம் நடைபெற உள்ளது. இதனால் அங்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் போராட்டத்தில் அசம்பாவிதம் ஏற்பட்டால் பொறுப்பேற்க வேண்டும் என்று போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமாருக்கு மாவட்ட ஆட்சியர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
உதயகுமாருக்கு நெல்லை மாவட்ட ஆட்சியர் அனுப்பிய நோட்டீசில் கூறியுள்ளதாவது:
சென்னை உயர்நீதிமன்றம் கூடங்குளம் அணுமின் நிலையம் இயங்குவதற்கு தடை விதிக்க முடியாது எனவும், அணு உலை இயங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை தள்ளுபடி செய்தும் உத்தரவு பிறப்பித்தது. கூடங்குளம் அணுமின் நிலையத்தில் இருந்து 7 கிலோ மீட்டர் தூரத்துக்குள் குற்றவியல் நடைமுறைச் சட்டப்பிரிவு 144 (1)-ன் கீழ் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அமலில் உள்ளது.
இந்தநிலையில் மீனவ கிராமங்களில் கிராம கமிட்டியை கூட்டி வரும் 9-ந் தேதியன்று அணு உலை முற்றுகை போராட்டம் நடத்தப் போவதாக தெரியவந்தது.
இந்த செயல் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவுகளின் கீழ் குற்ற நடவடிக்கை தொடர ஏதுவாக அமையும். இதை தெரிவித்தும், ஊர்வலம், கூட்டங்கள், முற்றுகை போராட்டம் போன்றவற்றில் சிறுவர்கள், பள்ளிக்கூட குழந்தைகள், முதியோர்கள் மற்றும் பெண்களை ஈடுபடுத்தும் போது, அசம்பாவிதம் ஏதும் ஏற்பட்டால் அதற்கு அணு உலை எதிர்ப்பு போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளரே முழு பொறுப்பு ஏற்க நேரிடும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
உதயகுமார் மறுப்பு
ஆனால் இந்த நோட்டீசை வாங்க உதயகுமார் மறுத்துவிட்டதால் அவருக்கு இ மெயில் மூலம் நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
போலீஸ் குவிப்பு
இன்றைய முற்றுகைப் போராட்டத்தையொட்டி கூடங்குளம் பகுதியில் பல்லாயிரக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் இன்றைய போராட்டத்தில் எவரது உயிருக்கும் அசம்பாவிதம் ஏதேனும் நடந்தால் அவர்தம் குடும்பத்தாருக்கு ரூ5 லட்சம் வழங்கப்படும் என்று போராட்டக் குழுவினர் நேற்று தண்டோரா போட்டு அறிவித்ததால் பரபரப்பும் பதற்றமுமாக இருக்கிறது கூடங்குளம் சுற்றுவட்டாரம்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications