சிவகாசி பட்டாசு ஆலை விபத்து- அதிகாரிகள் மீது நடவடிக்கை பாயாத மர்மம் என்ன?
சிவகாசி: சிவகாசியில் பட்டாசு ஆலை விபத்து நடந்து 4 நாட்கள் ஓடியும் விதிமீறல்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய அதிகாரிகள் மீது இதுவரை நடவடிக்கை எடுக்காதது பொதுமக்களிடையே சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிவகாசி பட்டாசு ஆலை விபத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் இன்னும் சோகத்தில் இருந்து மீளவில்லை. பட்டாசு ஆலையில் 7 அறைகள் மட்டுமே இருந்தால் மாவட்ட வருவாய் அலுவலரிடம் லைசென்சு பெற வேண்டும். ஆலையில் 13 அறைகள் இருந்ததால் சென்னை வெடிபொருள் கட்டுபாட்டு அலுவலரிடமும் 13 அறைக்கு மேல் இருந்தால் நாக்பூர் வெடிபொருள் கட்டுபாட்டு துறை அலுவலரிடம் அனுமதி பெற வேண்டும்.
இந்நிலையில் 38 பேரை பலிகொண்ட படடாசு விபத்து நடந்து 4 நாட்கள் ஆகியும் ஆலையை ஓப்பந்தம் எடுத்தவர், போர்மேன், கண்காணிப்பாளர், துணை கண்காணிப்பாளர் உள்பட 12 பேர் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளனர். அதிமுகவைச் சேர்ந்த ஆலை உரிமையாளர் தலைமறைவாகவே இருக்கிறார்.
ஆனால் விதிமீறல்களை கண்காணிக்க வேண்டிய பட்டாசு ஆலைக்கான தனி தாசில்தார், வருவாய்துறை, தீயணைப்பு துறை, தொழிலாளர்துறை, வெடிபொருள் கட்டுபாட்டுதுறை, சுகாதார துறை என 6 துறை அதிகாரிகள் யார் மீதும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
விபத்து நடந்த ஆலையில் வெடிபொருள் துணை தலைமை கட்டுபாட்டு அலுவலர் ரங்கசாமி ஆகஸ்ட் 28ந் தேதி சோதனை நடத்தி விதிமீறல்கள் இருந்ததால் உற்பத்தியை நிறுத்த நோட்டீஸ் வழங்கியதாக கூறப்படுகிறது. இதுபற்றிய விபரம் கூட விபத்து நடநத பினனரே தெரிய வந்துள்ளது.
விபத்து நடந்து இருக்காவிட்டால் ஆலை இன்றுவரை இயங்கி வந்து இருக்கும். இந்த விபத்தில் வருவாய் துறை, நெடுஞ்சாலை துறை, வெடிபொருள் கட்டுபாட்டு துறை, காவல் துறை வரையிலான அதிகாரிகள் பொறுப்பேற்க வேண்டும்.
தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக மருத்துவ சிகிச்சை அளிக்க கொண்டு செல்வதற்கான சாலை வசதி செயல்படாத காரணத்தினால் நெடுஞ்சாலை மற்றும் உள்ளாட்சி துறை அதிகாரிகளும் விபத்திற்கு பொறுப்பேற்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications