கூடங்குளத்தில் 144 தடை உத்தரவை உடனே திரும்பப் பெற மீனவர்கள் அமைப்பு வலியுறுத்தல்
சென்னை: கூடங்குளம் பகுதியில் போடப்பட்டுள்ள 144 தடை உத்தரவை திரும்பப் பெறாவிட்டால் இன்னும் 2 நாட்களில் தமிழகம் தழுவிய சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று அனைத்திந்திய மீனவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக அனைத்திந்திய மீனவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பை சேர்ந்த கடலோர மக்கள் பாதுகாப்பு இயக்க தலைவர் ஜெயக்குமார், அகில இந்திய பாரம்பரிய மீனவர் சங்கத்தலைவர் எஸ்.ஏ.மகேஷ் ஆகியோர் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
இடிந்தகரை கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிராக பெண்கள், குழந்தைகள் என அனைவரும் கடந்த 25 ஆண்டுகளாக போராடி வருகின்றனர். போராட்டம் கடந்த ஒரு ஆண்டுகளாக தொடர்ச்சியாக நடந்து வருகிறது.
கூடங்குளம் பகுதி மக்கள் தங்களின் வாழ்வாதாரத்துக்காகவும், வாழ்விடத்துக்காகவும் போராடி வருகிறார்கள். இவர்களை காவல்துறையினர் காட்டுமிராண்டித்தனமாக தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் விரட்டி உள்ளனர். இதை வன்மையாக கண்டிக்கிறோம்.
மேலும், கூடங்குளம் பகுதியில் போடப்பட்டு உள்ள 144 தடை உத்தரவை வாபஸ் பெறவேண்டும் என்று கோரி போலீஸ் டி.ஜி.பி.யை சந்தித்து மனு கொடுக்க உள்ளோம். மனுவின்மீது உரிய நடவடிக்கை எடுத்து தடை உத்தரவை திரும்பப் பெற வேண்டும். இல்லையெனில் வரும் 2 நாட்களில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்பட தமிழகம் முழுவதும் மறியல் போராட்டம் நடத்தப்படும் என்றனர் அவர்கள்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications