சேலம் அரசு கலைக் கல்லூரி பேராசிரியருக்கு அடி-உதை: பேராசிரியர்கள் வகுப்பு புறக்கணிப்பு
சேலம்: சேலம் அரசு கலைக் கல்லூரியில் மாணவிகளிடம் தகாத முறையில் நடந்து கொண்ட மாணவர்களை கண்டித்த பேராசிரியருக்கு அடி-உதை விழுந்தது. இதை கண்டித்து மற்ற பேராசிரியர்கள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சேலம் அரசு கலைக் கல்லூரியில் மாணவர்கள் சிலர், மாணவிகளிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. இது குறித்து தகவல் அறிந்த கல்லூரி இயற்பியல் துறை பேராசிரியர் ஒருவர், சம்பந்தப்பட்ட மாணவர்களை அழைத்து கண்டித்துள்ளார்.
இதில் ஆத்திரமடைந்த மாணவர்கள், பேராசிரியரை மிரட்டியுள்ளனர். மேலும் பேராசிரியரை அடித்து, உதைத்துள்ளனர். இதில் அவர் காயம் அடைந்தார். இந்த நிலையில் மாணவர்களின் அத்துமீறிய செயலை கண்டித்து, சேலம் கலைக்கல்லூரி பேராசிரியர்கள் அனைவரும் ஒன்று கூடி வகுப்பு புறக்கணிப்பில் ஈடுபட்டனர். இதனால் வகுப்புகள் பாதிக்கப்பட்டது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு, சேலத்தை அடுத்த ஆத்தூர் அரசு கலைக் கல்லூரி போராசியர்களில் 3 பேரை வெளியாட்கள் தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் கல்லூரியின் பெண் பேராசிரியர்களை வெளியாட்கள் சிலர் கேலி கிண்டல் செய்வதாகவும் புகார் எழுந்தது. இந்த சம்பவங்களில் ஈடுபடும் நபர்களின் மீது நடவடிக்கை எடுக்க கோரி வகுப்பு புறக்கணிப்பு போராட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications