கர்நாடக பேரவைத் தேர்தல்: தமிழருக்கு 6 தொகுதிகளை காங்கிரஸ் ஒதுக்க கோரிக்கை
பெங்களூர்: கர்நாடக மாநில சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட தமிழர்களுக்கு 6 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்று கர்நாடக காங்கிரஸ் முன்னாள் பொதுச்செயலாளர் கே.சுந்தரமூர்த்தி, சோனியாகாந்திக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து பெங்களூரில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
கர்நாடகத்தின் மக்கள்தொகையில் 5.46 விழுக்காட்டினர் தமிழர்கள் வசித்துவருவதாக 2001ம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பு தெரிவிக்கிறது. ஆனால் 2008ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை பொதுத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஒரு இடம்கூட தமிழருக்குக் கொடுக்கவில்லை. வழக்கமாக தமிழர்களுக்கு அளித்துவந்த 3 இடங்களையும் தரவில்லை. மக்களவை தேர்தலிலும் காங்கிரஸ் வேட்பாளர்கள் தோல்வி அடைந்ததற்கு காரணம், தமிழர்களுக்கு எந்த தொகுதியும் வழங்கப்படவில்லை.
கர்நாடகத்தில் வாழும் லட்சக்கணக்கான தமிழர்களின் உணர்வை மதித்து 2013ல் நடைபெறவுள்ள சட்டப்பேரவை பொதுத்தேர்தலில் தமிழர்கள் போட்டியிட பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டும். தமிழர்களின் மக்கள்தொகைக்கேற்ப குறைந்தது 12 இடங்களில் போட்டியிட வாய்ப்பளிக்க வேண்டும். இது சாத்தியப்படாத நிலையில், குறைந்தது 6 இடங்களிலாவது போட்டியிட வாய்ப்பளிக்க வேண்டும். இதில் 3 இடங்களை ஆதிதிராவிட சமுதாயத்தை சேர்ந்த தமிழர்களுக்கு ஒதுக்க வேண்டும் என்றார் அவர்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications