கூடங்குளம் : 3 ஆயிரம் மீனவர்கள் கடலில் இறங்கி போராட்டம்- விமானம், கப்பல் மூலம் கண்காணிப்பு
கூடங்குளம் கடற்கரையில் நடந்த தடியடி மற்றும் தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தை கண்டித்து இடிந்தகரை தேவாலயத்தில் அணு உலை எதிர்ப்பாளர்கள் நடத்திய 48 மணி நேர உண்ணாவிரதம் நேற்று முடிவடைந்தது/
இதைத் தொடர்ந்து புதிய போராட்டமாக இன்று முற்பகலில் சுமார் 3 ஆயிரம் மீனவர்கள் கடலுக்குள் இறங்கி போராட்டத்தை நடத்தி வருகின்றனர். ஆண்கள் கடலுக்குள் சற்று தொலைவிலும் பெண்கள் கரைக்கு அருகில் உள்ள பகுதிகளிலும் கை கோர்த்து மனித சங்கிலியாக நின்று கொண்டிருக்கின்றனர். குழந்தைகள் லைப் ஜாக்கெட் அணிந்தபடி கடலுக்குள் இறங்கியுள்ளனர். அனைத்து தரப்பு மக்களும் உற்சாகமாக இந்த போராட்டத்தில் இறங்கியிருப்பதால் அனேகமாக இது தினசரி போராட்டமாக உருவெடுக்கக் கூடும் எனக் கூறப்படுகிறது. அனைவரும் அணு உலையில் யுரேனியம் நிரப்புவதை உடனே நிறுத்த வலியுறுத்தி முழக்கமிட்டு வருகின்றனர்.
விமானம், கப்பல் மூலம் கண்காணிப்பு
கடலுக்குள் இறங்கி மீனவர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் கடற்படைக்குச் சொந்தமான கண்காணிப்பு விமானம் தாழப் பறந்து மீனவர்களை கண்காணித்து வருகிறது. இதேபோல் கடற்படைக்கு சொந்தமான கப்பல் ஒன்றும் கூடங்குளம் கடற்பரப்பில் நிறுத்தப்பட்டிருக்கிறது. கூடங்குளம் அணு உலை மத்திய அரசுக்கு சொந்தமானது என்பதால் பாதுகாப்பு கருதி கடற்படை விமானமும், கப்பலும் அங்கு நிறுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
மெசேஜ் அனுப்பிய உதயகுமார்
இன்றைய போராட்டத்தில் போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் சுப. உதயகுமார் கலந்து கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. தொடர்ந்தும் அவர் தலைமறைவாகவே இருந்து போராட்டத்தை ஒருங்கிணைத்து வருவதாக தெரிகிறது. இதனிடையே தாமே போராட்டத்துக்கு தலைமை ஏற்று வருகிறேன்.. அதனால் போரட்டத்தை உறுதியோடு முன்னெடுப்போம் என்று மெசேஜ் ஒன்றை அனுப்பியுள்ளதாக தெரிகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?













Click it and Unblock the Notifications