பொதுவாக்கெடுப்பு மூலம் சுதந்திரத் தமிழீழம் அமைய ஆதரவு திரட்டுவோம்: மதிமுக மாநாட்டில் தீர்மானம்
கரூர்: பொதுவாக்கெடுப்பு மூலம் சுதந்திரத் தமிழீழம் அமைப்பதை ஒரே இலக்காகக் கொண்டு உலகம் முழுவதும் ஆதரவை திரட்டும் பணியில் ஈடுபடுவோம் என்று மதிமுகவின் கரூர் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
கரூரில் நடைபெற்ற மதிமுகவின் அண்ணா பிறந்த நாள் விழா மற்றும் திராவிட இயக்க நூற்றாண்டு விழா மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
- இலங்கையில் ஈழத் தமிழர்கள் படுகொலைக்கு காரணமான அதிபர் ராஜபக்சேவை அனைத்துலக நீதிமன்றத்தில் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தி தண்டிப்பதையும், பொது வாக்கெடுப்பு மூலம் இலங்கையில் சுதந்திர தமிழ் ஈழத்தை அமைப்பதையும் ஒரே இலக்காகக் கொண்டு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் பாடுபட்டு வருகிறது. உலகம் முழுவதிலும் இதற்கான ஆதரவை திரட்டுகின்ற பணியில் மதிமுக ஈடுபடும்.
- இலங்கை அதிபர் ராஜபக்சேவை சாஞ்சிக்கு வர அனுமதிக்கக் கூடாது. மீறி வந்தால் பெரியார் பிறந்த நாளான செப்டம்பர் 17-ம் தேதி வைகோ தலைமையில் ராஜபக்சேவுக்கு கறுப்புக் கொடி காட்டுவதற்காக சாஞ்சிக்கு புறப்பட்டுச் செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.
- தமிழக மீனவர்களின் கண்ணீரைத் துடைக்கவும், அவர்களின் வாழ்வாதாரங்களைப் பாதுகாக்கவும், திட்டவட்டமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் வலியுறுத்தி, மீனவர் வாழ்வுரிமை மாநாடு வரும் நவம்பர் 24-ந் தேதி தூத்துக்குடியில் நடத்தப்படும்.
- கூடங்குளம் அணு உலையில் யுரேனியம் எரிபொருளை நிரப்பக் கூடாது. அணு உலையை நிரந்தரமாக அகற்ற வேண்டும். அணு சக்தி எதிர்ப்பு மக்கள் இயக்கத்துக்கு மதிமுக முழுமையான அதரவு அளிக்கும்.
- முல்லைப் பெரியாறு பென்னி குயிக் கட்டிய அணையை உடைக்க முற்படாதீர்கள், தமிழகத்துக்கு வரும் தண்ணீரை அணை கட்டித் தடுக்காதீர்கள் என எச்சரிக்கை செய்வதற்காக கேரளம் செல்லும் அனைத்து சாலைகளிலும் போக்குவரத்தை தடுத்தி நிறுத்தி முற்றுகைப் போராட்டம் நடத்தி, கேரள மக்களுக்கு நிலைமையை உணர்த்த மதிமுக தொடர்ந்து முற்படும். இதற்காக 2013-ம் ஆண்டு தொடக்கத்தில் முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் மதிமுக மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.
-
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications