கூடங்குளத்தில் உள்ள போலீசை வாபஸ் பெற வேண்டும்: அரசுக்கு நல்லக்கண்ணு வலியுறுத்தல்
நெல்லை: கூடங்குளத்தில் நிறுத்தப்பட்டுள்ள போலீஸ் படையைத் திரும்பப் பெற்று, போராட்டக்காரர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை வாபஸ் பெற வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு அரசை வலியுறுத்தியுள்ளார்.
இடிந்தகரை தேவாலயத்தில் போலீசார் புகுந்து மாதா சிலையை சேதப்படுத்தியதை கண்டித்து நெல்லையில் பிஷப் ஜூடு பால்ராஜ் தலைமையில் உண்ணாவிரதம் நடந்தது. இதில் பங்கேற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு செய்தியாளர்களிடம் கூறுகையில்,
உலக அளவில் மிகப்பெரிய போராட்டமாக கூடங்குளம் அணு உலைக்கு எதிரான உண்ணாவிரதப் போராட்டம் 400 நாட்களை கடந்து அமைதி வழியில் நடந்து வருகிறது. போராட்டம் நடத்தும் மக்களின் அச்சத்தைப் போக்கும் நடவடிக்கையில் ஈடுபடுவதை விட்டுவிட்டு அவர்களது போராட்டத்தை நசுக்கும் வகையில் அடித்து தாக்குதல் நடத்தி, துப்பாக்கிச்சூடும் நடத்தி உள்ளனர். இந்த அடக்குமுறை தவறானது. இது விபரீதத்தை
ஏற்படுத்தும். கூடங்குளத்தில் போலீசாரால் நடத்தப்பட்ட நிகழ்வுகளை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வன்மையாக கண்டிக்கிறேன்.
மேலும் அவர்கள் போராட்டத்தை திசை திருப்பும் வகையில் சிலை உடைத்தல் போன்ற செயல்களில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். போலீசாரின் இந்த செயலை கண்டிப்பதுடன் அங்கு அமைதி நிலவ மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். கூடங்குளத்தில் நடந்த தாக்குதல் மனித உரிமையை மீறிய செயலாகும். அங்கு நிறுத்தப்பட்டுள்ள போலீசார் அனைவரையும் உடனடியாக திரும்ப பெற வேண்டும்.
மேலும் போராட்டக்காரர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை வாபஸ் பெற வேண்டும் என்றார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications