தொடரும் எதியூரப்பா கலகம்: பாஜகவிலிருந்து விலகி தனிக்கட்சி தொடங்க சுற்றுப்பயணம்!

தமது முயற்சியால் கர்நாடகத்தில் ஆட்சியைப் பிடித்த பாரதிய ஜனதா கட்சி இப்போது தம்மையே தூக்கி எறிந்துவிட்டது என்பது எதியூரப்பாவின் குமுறல். தம்மை முதல்வர் பதவியிலிருந்து நீக்கிவிட்டு சதானந்த கவுடாவை முதல்வராக்கியது பாஜக மேலிடம். பிறகு ஓராண்டு கலகத்துக்குப் பிறகு எதியூரப்பாவின் நெருக்கடியில் ஜெகதீஷ் ஷெட்டர் முதல்வரானார். ஆனால் இப்போது பாஜகவினர் எவருமே எந்த நிகழ்ச்சிக்குமே தம்மை அழைப்பதில்லை என்று குமுறிக் கொண்டிருக்கிறாராம் எதியூரப்பா.
இந்த சூழலில் அண்மையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் எதியூரப்பா பேசியதாவது:
அடுத்த மாதம் மொத்தம் 100 சட்டப்பேரவைத் தொகுதிகளில் பிரச்சாரம் செய்ய திட்டமிட்டுள்ளேன். இந்த மாநிலத்தின் முதல்வராக நான் மீண்டும் வருவேன். எனக்கு மக்களின் ஆசிதான் தேவையே தவிர பாஜக தலைவர்களின் தயவு அல்ல. பாஜக, காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் அரசுகள் கர்நாடகத்துக்க்கு தேவையில்லை. இந்த மக்களுக்கு ஏழைகளுக்கான- விவசாயிகளுக்கான அரசாங்கம்தான் தேவை என்று கூறியுள்ளார்.
அதாவது வரும் அக்டோபர் மாதத்துக்குள் தம்மை பாஜகவின் மாநிலத் தலைவராக்க அக்கட்சி மேலிடம் மறுத்துவிட்டால் நிச்சயம் தனிக் கட்சி தொடங்குவது என்ற முடிவில் எதியூரப்பா உறுதியாக இருப்பதைத்தான் இந்த பேச்சு வெளிப்படுத்துகிறது என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள்.
எதியூரப்பாவின் முதல்வர் கனவு நிறைவேறும் வரை கலக அலைகள் ஓய்வதில்லை!
-
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
கை, கால்களை வெட்டினால்தான் பயம் வரும்! பலாத்கார வழக்கில் கட் அண்ட் ரைட்டாக சொன்ன கர்நாடக ஹைகோர்ட் -
சிம்பிளாக பதவியேற்பு.. கர்நாடகாவில் கவனத்தை ஈர்க்கும் டி.கே.சிவகுமார்! காரணம் இதுதான்!












Click it and Unblock the Notifications