ரயிலில் நாற்றமடிக்கும் பெட்சீட்: ரயில்வேக்கு வேதனையுடன் நீதிபதி கடிதம்

Subscribe to Oneindia Tamil

 AC Coach
சென்னை: தென்னக ரயில்வேயின் ஏசி பெட்டிகளில் சுகாதாரமற்ற பெட்சீட்கள் விநியோகம் செய்யப்படுவதாக புகார் எழுந்துள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி நீதிபதி ஆர்.எஸ். ராமநாதன், தெற்கு ரயில்வே பொது மேலாளருக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார்.

நீதிபதி எழுதிய கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது,

கடந்த ஆகஸ்ட் 19ம் தேதி நெல்லை விரைவு ரயிலில் பயணித்த போது தனக்கும், தன்னுடன் ஏசி 2 டயர் கோச்சில் பயணித்தவர்களுக்கும் அளித்த படுக்கை விரிப்புகள் அழுக்காகவும், நாற்றம் அடிப்பதாகவும் இருந்தன. இது முதல் முறையல்ல. இதுபோல பல முறை நான் அவதிப்பட்டுள்ளேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

எனக்கு மட்டுமல்ல என்னுடன் பயணித்த பெரும்பாலான பயணிகளுக்கு சுத்தம் செய்யப்படாத படுக்கை விரிப்புகளே அளிக்கப்படுகிறது. எனவே உரிய நடவடிக்கை எடுத்து, இனிமேல் சுத்தமான படுக்கை விரிப்புகளை பயணிகளுக்கு அளிக்க வேண்டும் என்று அந்த கடிதத்தில் நீதிபதி கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்த புகார் குறித்து பதிலளித்துள்ள தென்னக ரயில்வேயின் தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி வி.ஜெ. அச்சம்மா, ரயில்களில் கொடுக்கப்படும் படுக்கை விரிப்புகளை சுத்தம் செய்வதற்காக பேசின் பிரிட்ஜ் அருகே சுத்தப்படுத்தப்படும் இடம் உள்ளது. இங்கு ஒரே நேரத்தில் ஆயிரம் பெட்சீட்கள் வரை சுத்தம் செய்ய முடியும். இதேபோல் திருவனந்தபுரத்தில் டென்டர் விடப்பட்டுள்ளது. சுத்தமற்ற படுக்கை விரிப்புகளை சப்ளை செய்தது குறித்து ஒப்பந்தகாரர்களிடம் கேட்கப்படும் என்று கூறி முடித்துக்கொண்டார்.

கடந்த ஆண்டு, சென்டரல் மற்றும் எழும்பூர் ரயில் நிலையங்களில் விரைவு ரயில்களில் இருந்த படுக்கை விரிப்பு, மட்டும் பெட்ஷீட்களை சிபிஐ சோதனை செய்து, பல தூய்மையற்ற படுக்கை விரிப்புகளை பறிமுதல் செய்தது. ஆனால், அதன்பிறகும் எதுவும் மாறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+