தர்மபுரியில் 16 வயது சிறுமியின் திருமணம் தடுத்து நிறுத்தம்: மணமகன் உட்பட 5 பேர் கைது
தர்மபுரி: தர்மபுரியில் 16 வயது சிறுமிக்கு 30 வயது நபருடன் நடக்க இருந்த திருமணத்தை போலீசார் தடுத்து நிறுத்தினர். திருமணத்திற்கு ஏற்பாடு செய்த மணமகன் உட்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
தர்மபுரி மாவட்டம் அரூர் தாலுக்காவில் தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு நேற்று 16 வயது சிறுமிக்கு திருமணம் நடக்க இருப்பதாக, கோட்டப்பட்டி காவல் நிலையத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் சம்பத்குமார் வருவாய் ஆய்வாளர் குணசேகரன், கிராம நிர்வாக அலுவலர் ஜமுனா ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்றனர்.
அங்கு நடத்திய விசாரணையில் 16 வயது சிறுமிக்கு திருமணம் நடக்க இருந்தது தெரியவந்தது. இதையடுத்து திருமணம் உடனடியாக தடுத்து நிறுத்தப்பட்டது. திருமண வயதை எட்டாத சிறுமியை திருமணம் செய்ய முன்வந்த மணமகன் இளங்கோவனை(30) போலீசார் கைது செய்தனர். மேலும் திருமண ஏற்பாடுகளை செய்த மணமகன் மற்றும் மணமகளின் பெற்றோரையும் போலீசார் கைது செய்தனர்.
தர்மபுரி மாவட்டத்தில் திருமண வயதை எட்டாத சிறுமிகளுக்கு மறைமுகமாக திருமணம் நடத்தப்பட்டு வருகிறது. எனவே இது போன்ற இளம்வயது திருமணங்களுக்கு ஏற்பாடு செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தர்மபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அஷ்ரா கார்க் எச்சரித்து உள்ளார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications