மத்திய அமைச்சரவையில் மாற்றம்: ராகுல் இல்லை- சிரஞ்சீவி அமைச்சராகிறார்?
டெல்லி: மத்திய அமைச்சரவையில் விரைவில் மேற்கொள்ள இருக்கும் மாற்றத்தின் போது ராகுல்காந்தி அமைச்சர் பொறுப்பேற்கமாட்டார் என்று கூறப்படுகிறது.
மத்திய அமைச்சரவையில் தமது 6 அமைச்சர்களை விலக்கிக் கொண்டிருக்கும் திரிணாமுல் காங்கிரஸ் அரசுக்கான ஆதரவையும் திரும்பப் பெறுகிறது. இதைத் தொடர்ந்து மத்திய அமைச்சரவையில் மாற்றம் செய்தாக வேண்டிய நிலையில் இருக்கிறது மத்திய அரசு.
இந்த அமைச்சரவை மாற்றத்தின் போது ராகுல் காந்தியும் அமைச்சராவார் என்று கூறப்பட்டாலும் தற்போது அவர் அமைச்சரவையில் இணைய மாட்டார் என்றே கூறப்படுகிறது. அதே நேரத்தில் மகாராஷ்டிரா முதல்வராக உள்ள பிரித்விராஜ் சவாண் மாற்றப்பட்டு மத்திய அமைச்சரவையில் சேர்க்கப்படலாம் என்கின்றன டெல்லி வட்டாரங்கள். மகாராஷ்டிரா முதல்வராவதற்கு முன்பு அவர் பிரதமர் அலுவலக விவகாரங்களுக்கான இணை அமைச்சராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல் அண்மையில் காலமான மத்திய அமைச்சர் விலாஸ்ராவ் தேஷ்முக்கின் மகன் அமித் தேஸ்முக்குக்கு இணை அமைச்சர் பதவி வழங்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
தமது பிரஜா ராஜ்யம் கட்சியையே கலைத்துவிட்டு காங்கிரசில் ஐக்கியமான நடிகர் சிரஞ்சீவிக்கு கேபினட் அமைச்சர் பதவி கிடைக்கக் கூடும் என்கிறது காங்கிரஸ் வட்டாரங்கள். மேற்குவங்கத்தைச் சேர்ந்த தீபா தாஸ்முன்ஷி அல்லது அதிர் செளத்ரிக்கும் கர்நாடகத்தின் ரஹ்மானுக்கும் அமைச்சர் பதவி கிடைக்கலாம் என்று கூறப்படுகிறது.
இதேபோல் வீரப்ப மொய்லி மற்றும் வயலார் ரவி ஆகியோரது அமைச்சகப் பொறுப்புகளிலும் மாற்றம் இருக்கலாம் என்கின்றன டெல்லி வட்டாரங்கள்
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications