தமிழகத்தில் மின்தடை வரும் டிசம்பரில் இருந்து குறையும்: மின்துறை அமைச்சர்
நெல்லை: தமிழகத்தில் ஏற்பட்டு வரும் மின்தடையை போக்க முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அரசு, பல புதிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. எனவே வரும் டிசம்பர் மாதத்திற்கு பிறகு தமிழகத்தில் மின்தடை குறையும் என்று தமிழக மின்சார துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
நெல்லை அதிமுக நிர்வாகிகள் மற்றும் செயல்வீரர்களுக்கான ஆலோசனை கூட்டம் நெல்லையில் நடைபெற்றது. இதில் தமிழக மின்சார துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், தமிழகத்தில் வரும் டிசம்பர் மாதத்திற்கு பிறகு மின்தடை குறையும் என்று தெரிவித்தார்.
இது குறித்து அவர் கூறியதாவது,
மத்திய அரசின் உதவி இல்லாமல் பல்வேறு திட்டங்களை தமிழக முதல்வர் ஜெயலலிதா செயல்படுத்தி வருகிறார். இதனால் தமிழகம் அனைத்து துறைகளிலும் சாதனை படைத்து வருகிறது.
தமிழகத்தில் தற்போது நிலவி வரும் மின் பற்றாக்குறைக்கு கடந்த திமுக ஆட்சியின் செயல்பாடுகள் தான் காரணம். தேர்தலின் போது அளித்த அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றி வரும் முதல்வர், மின் பற்றாக்குறை பிரச்சனையிலும் தகுந்த நடவடிக்கை எடுத்து வருகிறார்.
இதற்காக தமிழகத்தில் ஏற்கனவே உள்ள மின் உற்பத்தி திட்டங்களுடன், பல புதிய திட்டங்களையும் முதல்வர் செயல்படுத்தி வருகிறார். இதன்மூலம் வரும் டிசம்பர் மாதத்திற்கு பிறகு தமிழகத்தில் மின் பற்றாக்குறை வெகுவாக குறையும் என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications