ஸ்பெக்ட்ரம், நிலக்கரி..ஊழல்னு பணம்காய்ச்சி மரங்களை வளர்த்ததே காங்கிரஸ்தானே..: மன்மோகனை சாடும் மோடி

Subscribe to Oneindia Tamil

Narendra modi
அகமதாபாத்: டீசல் விலை உயர்வு, கேஸ் கட்டுப்பாடு, சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டுக்கு அனுமதி போன்றவற்றை நியாயப்படுத்தி நாட்டு மக்களுக்கு மன்மோகன் தொலைக்காட்சியில் ஆற்றிய உரையும் கடுமையான விமர்சனத்துக்குள்ளாகியிருக்கிறது.

பிரதமர் மன்மோகன்சிங் தமது உரையில், பணம் ஒன்றும் மரத்தில் காய்க்கவில்லை எனக் கூறியிருந்தார். இதற்கு குஜராத் முதல்வர் நரேந்திர மோடி கடுமையான பதிலடி கொடுத்த்ருக்கிறார்.

இது தொடர்பாக மோடி கூறியுள்ளதாவது:

தி கிரேட் பொருளாதார மேதையான மன்மோகன்சிங், மக்களை சமாதானப்படுத்துவதற்கு 'பணம் மரத்தில் காய்க்கலை" என்பது போன்ற வார்த்தைகளையா பயன்படுத்துவது? பிரதமர்ஜி! இந்த நாட்டு மக்களுக்கு நன்றாகவே தெரியும்... பணம் மரத்தில் காய்க்கவில்லை என்று....அதே நேரத்தில் உங்களுக்கு ஸ்பெக்ட்ரம் அலைவரிசையும் நிலக்கரி ஒதுக்கீடும் பணம் காய்க்கும் மரங்களாக இருந்தது என்பதை நாங்கள் நன்றாகவே அறிவோம்... நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டு ஊழலை விட உங்களுக்கு மிகப் பெரிய பணம் காய்ச்சி மரம் எதுவாக இருக்கப் போகிறது?

நான் பகிரங்கமாகவே குற்றம்சாட்டுகின்றேன்... ஸ்பெக்ட்ரம் மற்றும் நிலக்கரி சுரங்க ஒதுக்கீடுகள் என்னும் பணம் காய்ச்சி மரங்களை உருவாக்கியதே காங்கிரஸ்தான்.... இந்த நாட்டை சீர்குலைத்துவிட்டனர் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+