வி.ஏ.ஓ. தேர்விற்கான ஹால் டிக்கெட்: இணையதளத்தில் வெளியீடு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகம் முழுவதும் வரும் 30ம் தேதி நடைபெற உள்ள, கிராம நிர்வாக அலுவலர் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் 1,870 கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் முடிவு செய்துள்ளது. இதற்கான ஆட்களை எழுத்து தேர்வு மூலம் நிரப்ப உள்ளது.

இந்த பணிக்கான விண்ணப்பம் அளிக்கும் பணி கடந்த ஜூலை 9 முதல் ஆகஸ்ட் 3ம் தேதி நடைபெற்றது. இத்தேர்வுக்கு ஆன்லைன் மூலம் பல லட்சம் பேர் விண்ணப்பித்துள்ள நிலையில், வரும் 30ம் தேதி தமிழகம் முழுவதும் தேர்வு நடைபெற உள்ளது.

இந்த நிலையில் வி.ஏ.ஓ. தேர்வுக்கான ஹால் டிக்கெட் இணைய தளத்தல் அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.

இது குறித்து தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது,

வரும் 30ம் தேதி காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை, மாநில முழுவதும் உள்ள 3,483 மையங்களில் வி.ஏ.ஓ. தேர்வு நடைபெற உள்ளது. இத்தேர்வின் மூலம் 1,870 பணியிடங்களை நிரப்பப்பட உள்ளது. தேர்வு எழுதுவர்களுக்கான ஹால் டிக்கெட், தேர்வாணைய இணையதளங்களான www.tnpscexams.net மற்றும் www.tnpsc.gov.in வெளியிடப்பட்டுள்ளன.

விண்ணப்பதாரர்கள், விண்ணப்ப எண்ணை பதிவு செய்து ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+