மமதா அமைச்சரவையில் இருந்து 6 காங்கிரஸ் அமைச்சர்கள் பதவி விலகல்
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி அமைச்சரவையில் இருந்து 6 காங்கிரஸ் அமைச்சர்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர்.
மேற்குவங்கத்தில் மமதா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் அரசில் காங்கிரஸ் கட்சியும் இடம்பெற்றிருந்தது. காங்கிரஸ் கட்சி சார்பில் 6 பேர் அமைச்சர்களாக இருந்தனர்.
மத்திய அரசின் டீசல் விலை உயர்வு, சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டுக்கு அனுமதி ஆகியவற்றுக்கு எதிர்ப்புத் தெரிவித்து திர்ணாமுல் காங்கிரஸ் மத்திய அமைச்சரவையிலிருந்து விலகியது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் 6 அமைச்சர்களும் தங்களது பதவிகளை நேற்று முன்தினம் ராஜினாமா செய்தனர். மேலும் மத்திய அரசுக்கான ஆதரவையும் திரிணாமுல் காங்கிரஸ் நேற்று முன்தினம் விலக்கிக் கொண்டது.
இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் மேற்கு வங்கத்தில் மமதா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் அரசிலிருந்து காங்கிரஸ் நேற்று விலகியது. காங்கிரஸ் சார்பில் அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த 6 அமைச்சர்களும் நேற்று தங்களது ராஜினாமா கடிதங்களை முதல்வர் மமதா பானர்ஜியிடம் ஒப்படைத்தனர்.
காங்கிரஸ் கட்சி விலகினாலும் திரிணாமுல் காங்கிரஸ் அரசுக்கு எந்த ஒரு ஆபத்தும் இல்லை. அம்மாநிலத்தில் பெரும்பான்மைக்கு போதுமான இடங்களை திரிணாமுல் காங்கிரஸ் கட்சி பெற்றிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications