1077 என்ற எண்ணில் வடகிழக்கு பருவமழை குறித்த புகார் தெரிவிக்கலாம்: கரூர் கலெக்டர் ஷோபனா அறிவிப்பு
கரூர்: வடகிழக்கு பருவமழை தொடர்பான புகார்களை, 1077 என்ற இலவச டெலிபோன் எண்ணில் தெரிவிக்காலம் என்று கரூர் கலெக்டர் ஷோபனா அறிவித்துள்ளார்.
வடகிழக்கு பருவ மழை குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த ஆலோசனை கூட்டம், கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கரூர் மாவட்ட கலெக்டர் ஷோபனா கலந்து கொண்டு பேசியதாவது,
வடகிழக்கு பருவமழை காலங்களில் மழை வெள்ளம் தொடர்புடைய புகார்களை தெரிவிக்க, கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் 24 மணி நேரமும் செயல்படும் வகையில், 1077 என்ற கட்டணமில்லாத தொலைபேசி வசதி செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள், அனைத்துத்துறை அலுவலர்கள் ஆகியோர் மழையளவு மற்றும் சேத விவரங்களை இந்த எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.
வெள்ளத்துக்கு இலக்காகும் பகுதிகளை வருவாய்த்துறை, பஞ்சாயத்து வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் பொதுப்பணித்துறையினர் ஒருங்கிணைந்து கண்காணிக்க வேண்டும். குறிப்பாக காவிரி, அமராவதி, நொய்யல், குடகனாறு, நங்காஞ்சியாறு ஆகிய ஆறுகளின் நீர்வரத்து குறித்து தகவல் தெரிவிக்க வேண்டும். தீயணைப்பு துறையினர் வெள்ள காலங்களில் மீட்பு நடவடிக்கை மேற்கொள்ள தயார் நிலையில் இருக்க வேண்டும்.
அதே போல் உணவு பொருள் வழங்கல் துறையினர் அத்தியாவசியப் பொருட்களை போதுமான அளவு இருப்பு வைத்துக் கொள்ள வேண்டும். சுகாதாரத்துறையினர் தொற்று நோய்களை கண்காணிக்கவும், உரிய மருத்துவ வசதிகள் செய்யவும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் 24 மணி நேரமும் மருத்துவ பணியாளர்களை நியமித்தும், உயிர் காக்கும் மருந்து பொருட்களை போதுமான அளவில் இருப்பில் வைத்தும் தயார் நிலையில் இருக்க வேண்டும்.
பருவமழை காரணமாக பாதிக்கப்படும் பொது மக்களை பாதுகாக்கவும், தங்க வைக்கவும், பள்ளிக் கட்டிடங்கள், சமுதாயக் கூடங்கள் மற்றும் திருமண மண்டபங்களின் விவரங்கள் போன்றவற்றை தயாராக வைத்திருக்க வேண்டும் என்றார்.
-
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி












Click it and Unblock the Notifications