கட்டிய கணவரை மாமாவுடன் சேர்ந்து கொலை செய்த புதுப் பெண்..கள்ளக்காதல்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: கல்பாக்கம் அருகே திருமணமாகி நான்கு மாதங்களே ஆன நிலையில் கணவரை, தனது மாமாவுடன் சேர்ந்து ஒரு பெண் கொலை செய்துள்ளார். கள்ளக்காதலே இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது.

காஞ்சிபுரம் மாவட்டம் கல்பாக்கம் அருகே உள்ல ஆயப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன். 34 வயதான இவர் ஒலி ஒளி அமைப்பாளராக இருந்து வந்தார். இவருக்கு இவரை விட 14 வயது குறைவான திலகவதி என்ற பெண்ணை நான்கு மாதங்களுக்கு முன்பு் திருமணம் செய்து கொடுத்தனர். நான்கு மாதமாக இருவரும் ஆயப்பாக்கத்தில் குடும்பம் நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் கடந்த 19ம் தேதி முருகன் மர்மமான முறையில் படுக்கையில் பிணமாகக் கிடந்தார். இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். பிணத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்குப் பின்னர் குடும்பத்தாரிடம் ஒப்படைத்தனர்.

ஆனால் முருகனைக் கொலை செய்தவர்களைக் கண்டுபிடிக்கக் கோரி உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தியபோது திலகவதி சிக்கினார். அவரிடம் போலீஸார் தீவிரமாக விசாரித்தபோது, தானும், தனது மாமா சேட்டு என்பவரும் சேர்ந்து கொலை செய்ததாக கூறினார் திலகவதி.

தனது கணவர் தினசரி குடித்து விட்டு வந்ததாகவும், இதனால் கோபமடைந்து அவரைக் கொலை செய்ததாகவும் கூறினார். திலகவதி கரண்டியை சூடாக்கி அவரது உதடு மற்றும் தோள்பட்டையில் சூடு வைத்தாராம் திலவகதி. சேட்டு, கழுத்தில் துண்டைப் போட்டு இறுக்கிக் கொன்றார் என்று திலகவதி வாக்குமூலம் கொடுத்துள்ளாராம்.

ஆனால் இந்தக் கொலைக்கு குடிப்பழக்கம் காரணமாக இருக்காது என்றும் கள்ளக்காதலே காரணம் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் தலைமறைவான சேட்டையும் போலீஸார் தற்போது கைது செய்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+