பாகிஸ்தான் நாளிதழ்களுக்கு தடை விதித்தது ஆப்கானிஸ்தான்
காபூர்: பாகிஸ்தான் நாட்டு நாளிதழ்கள் அனைத்துக்கும் ஆப்கானிஸ்தான் தடை விதித்துள்ளது. இந்தத் தடை கடந்த வெள்ளிக்கிழமை முதல் அமலுக்கு வந்துள்ளது.
பாகிஸ்தான் நாட்டு நாளிதழ்கள் வழியாக தலிபான் தீவிரவாதிகள் தெரிவிக்கும் கருத்துகள் ஆப்கான் மக்களை சென்றடையக் கூடாது என்பதற்காக இந்தத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. பாகிஸ்தான் நாட்டு நாளிதழ்கள், தலிபான்களின் செய்தித் தொடர்பாளர்களைப் போல் செய்திகளை வெளியிடுவதாக ஆப்கானிஸ்தான் அரசு குற்றம்சாட்டியுள்ளது.
பாகிஸ்தான் நாட்டுடனான எல்லையோர மாகாணங்களாக நங்கர்ஹார், குனார், நுரிஸ்தான் ஆகியவற்றின் எல்லைப் பாதுகாப்பு போலீசார் இந்த விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த வியாழன்று ஐக்கிய நாடுகல் பாதுகாப்பு சபையில் பாகிஸ்தான் மீது ஆப்கானிஸ்தான் புகார் கூறியிருந்தது. எல்லை மாகாணமான குனார் பகுதியில் பாகிஸ்தான் தொடர்ந்து நடத்தும் தாக்குதலில் பொதுமக்கள் உயிரிழந்து வருவதாக குற்றம்சாட்டியிருந்தது. இதைத் தொடர்ந்து இருநாடுகளிடையேயான உறவில் விரிசல் அதிகரித்தது. இந்த நிலையில் பாகிஸ்தான் நாளிதழ்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications