இந்திய பொருளாதார வளர்ச்சி விகிதத்தை 5.5% ஆக குறைத்த ஸ்டாண்டர்ட் அண்ட் புவர்!

முன்னதாக இந்தியாவின் ஒட்டுமொத்த உற்பத்தி (GDP) 6.5 சதவீதமாக இருக்கும் என்று இந்த அமைப்பு தெரிவித்திருந்தது. இந் நிலையில் இன்று அதை 5.5 சதவீதமாகக் குறைத்துள்ளது.
சர்வதேச அளவில் நிலவி வரும் பொருளாதார சிக்கல்களால் இந்தியாவால் 6.5 சதவீத வளர்ச்சியை எட்ட முடியாது என்று ஸ்டாண்டர்ட் அண்ட் புவர் தெரிவித்துள்ளது.
பருவ மழை பொய்த்துவிட்டதால், இந்தியாவின் வேளாண்துறை வளர்ச்சி கடுமையாக பாதிக்கப்படும் என்றும், ஒரே நேரத்தில் 20 மாநிலங்களில் மின்வெட்டு ஏற்படுத்திய தாக்கத்தால் சர்வதேச முதலீட்டாளர்களிடையே இந்தியாவில் முதலீடு செய்வது குறித்த தயக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
ஐரோப்பாவில் பொருளாதார நெருக்கடி நீடிப்பதாலும், அமெரிக்க பொருளாதார மீட்சியில் மந்தமான நிலை நிலவுவதாலும், சீனாவின் வளர்ச்சி விகிதம் குறைய ஆரம்பித்துள்ளதும் இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளின் பொருளாதார வளர்ச்சியை பாதிக்கும் என்று ஸ்டாண்டர்ட் அண்ட் புவர் கணித்துள்ளது.
அதே நேரத்தில் கடந்த வாரம் மத்திய அரசு அறிவித்த பொருளாதார சீர்திருத்தங்கள் தொடர்பாக ஸ்டாண்டர்ட் அண்ட் புவர் எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை. கடந்த வாரம் டீசல் விலையை உயர்த்தியதோடு, சமையல் கேஸ் சிலிண்டர்களுக்கான மானியத்தைக் குறைத்தது மத்திய அரசு.
மேலும் சில்லறை வணிகத்திலும், விமானத்துறையிலும், தகவல் ஒளிபரப்புத் துறையிலும், மின் வினியோகத்துறையிலும் அன்னிய முதலீட்டை அனுமதிக்கும் உத்தரவையும் பிறப்பித்தது நினைவுகூறத்தக்கது.
இந்த மாதத் துவக்கத்தில் இன்னொரு தர மதிப்பீட்டு நிறுவனமான மோர்கன் ஸ்டான்லி, இந்தியாவின் வளர்ச்சி விகிதத்தை 5.8 சதவீதத்தில் இருந்து 5.1 சதவீதமாகக் குறைத்தது. அதே போல எச்எஸ்பிசி 6.3 சதவீதத்தில் இருந்து 5.7 சதவீதமாகக் குறைத்தது. ஸ்டாண்ட்ர்ட் அண்ட் சார்ட்டட் 6.2 சதவீதத்தில் இருந்து 5.4 சதவீதமாகக் குறைத்ததும் குறிப்பிடத்தக்கது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications