கேஜ்ரிவால் தரும் நிதி வேண்டாம்... அன்னா அதிரடி

அன்னாவுக்கும், அவரது வலது கரம் மற்றும் இடதுகரம் போலத் திகழ்ந்து வந்தவருமான கேஜ்ரிவாலுக்கும் இடையே இப்போது ஆகாமல் போய் விட்டது. கேஜ்ரிவாலின் அரசியல் திட்டங்களை அன்னா நிராகரித்து விட்டார். மேலும் இனிமேல் கேஜ்ரிவாலுடன் ஒட்டும் கிடையாது, உறவும் கிடையாது என்றும் கூறி விட்டார். அதை விட முக்கியமாக, இனிமேல் கேஜ்ரிவால் தரப்பினர் எனது படத்தையோ, பெயரையோ கூட உச்சரிக்கக் கூடாது, பயன்படுத்தக் கூடாது என்று கூறி விட்டார்.
இதனால் அதிர்ச்சி அடைந்து போன கேஜ்ரிவால், நீங்க படம் கொடுக்காட்டி என்னன்னா, உங்க முகத்தை இயத்தில் பதித்து வைத்திருக்கிறோம் என்று அட்டகாசமாக பதிலளித்தார்.
இந்த நிலையில், செப்டம்பர் 20ம் தேதி மகாராஷ்டிர சதனில் நடந்த ஒரு கூட்டத்தில் அன்னா, கிரண் பேடி ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது, ஊழல் எதிர்ப்புப் போராட்டத்தின் போது திரட்டப்பட்ட நிதியை கேஜரிவால் தலைமையிலான பொது மக்கள் நலனுக்கான ஆராய்ச்சி பவுண்டேசனிடமிருந்து திரும்பப் பெற வேண்டும் என கூட்டத்தில் பங்கேற்றவர்கள் வலியுறுத்தினர்.
அப்போது, கேஜரிவால் அந்த நிதியைத் திருப்பித் தர முன்வந்ததாகவும், ஆனால் அந்த நிதியை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள் என அவரிடம் தெரிவித்து விட்டதாகவும் ஹசாரே தெரிவித்தார்.
இந்த சண்டை எங்கே போய் முடியமோன்னு தெரியலையே என்று ஊழல் எதிர்ப்பு ஆர்வலர்கள் இப்போது அங்கலாய்த்து வருகின்றனர்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications