'தனிப்பட்ட காரணங்களுக்காக' அன்னாவிடம் இருந்து விலகிய உதவியாளர்!
புனே: சில தனிப்பட்ட காரணங்களுக்காக காந்தியவாதி அன்னா ஹசாராவிடம் விலகியதாக, அவரது உதவியாளராக இருந்த சுரேஷ் பத்தரே தெரிவித்துள்ளார். ஆனால் ஹசாரேவின் வலியுறுத்தலின் பேரில், சுரேஷ் பத்தரே விலகியதாக சில தகவல்கள் வெளியாகி உள்ளன.
நாட்டில் நடைபெறும் ஊழல்களுக்கு எதிராக போராடி வரும் காந்தியவாதி அன்னா ஹசாரேவின் உதவியாளராக இருந்தவர் சுரேஷ் பத்தரே. கடந்த வாரம் யோகா குரு பாபா ராம்தேவ்வை, அன்னா ஹசாரே ரகசியமாக சந்தித்து பேசிய சம்பவத்தை சுரேஷ் பத்தரே மூலம் ஊடகங்களுக்கு கசிந்துவிட்டது. மேலும் அரவிந்த் கேஜ்ரிவால் குறித்த சில செய்திகளும் சுரேஷ் பத்தரே மூலம் வெளியானது.
முன்னதாக கேஜ்ரிவாலிடம் இருந்து பிரிந்த அன்னா ஹசாரே, பாபா ராம்தேவ்வை சந்திக்க சுரேஷ் பத்தரே எதிர்ப்பு தெரிவித்தார். இந்த நிலையி்ல தற்போது தனது உதவியாளர் பொறுப்பில் இருந்து சுரேஷ் பத்தரே விலகி உள்ளனர். சில தனிப்பட்ட காரணங்களால் அன்னா ஹசாரேவிடம் இருந்து விலகியதாக, சுரேஷ் பத்தரே தெரிவித்துள்ளார். ஆனால் அன்னா ஹசாரேவின் வற்புறுத்தலின் பேரில், அவர் விலகியதாக சில ரகசிய தகவல்கள் வெளியாகியுள்ளது.
இது குறித்து சுரேஷ் பத்தரே கூறியதாவது,
சில தனிப்பட்ட காரணங்களுக்காக எனது உதவியாளர் பொறுப்பில் இருந்து விலகினேன். ஆனால் அன்னாவின் கருத்துகளுக்காக தொடர்ந்து பணியாற்ற உள்ளேன். அன்னா ஹசாரேவுடன் இனி முழு நேரமாக பணியாற்ற முடியாது என்றார்.
அன்னா ஹசாரேவை குறித்து கேட்ட போது, கருத்து தெரிவிக்க சுரேஷ் பத்தரே மறுத்துவி்ட்டார்.
இது குறித்து அன்னா ஹசாரேவின் மற்றொரு செயலாளரான தத்தா அவரி என்பவர் கூறியதாவது, சுரேஷ் பத்தரேயின் பணியை யார் செய்வது என்பது குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. அலாவுதீன் ஷேயிக் தற்காலிகமாக உதவியாளர் பணியில் ஈடுபட்டு வருகிறார் என்றார்.












Click it and Unblock the Notifications